புண்படுத்திட்டே இருக்கீங்களேங்க! அதிரடியாக உயர்ந்த பால் விலை! காலையிலேயே மக்களுக்கு வந்த ஷாக் செய்தி!
டெல்லி: நாடு முழுவதும் அமுல் பால் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது. லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக அமுல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பால் விலை உயர்வு காரணமாக தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களும் உணவு வகைகளின் விலையை உயர்த்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஜராத் கூட்டுறவு அமைப்பின் கீழ் செயல்படும் அமுல் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய பால் பொருள் நிறுவனங்களில் ஒன்றாகும். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் அமுல் பால் மற்றும் பால் பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.

இந்த நிலையில், பால் உற்பத்திச் செலவு தொடர்ந்து உயர்ந்து வருவதால் விலையை திருத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று முதல் அமுல் பால் அனைத்து வகைகளுக்கும் லிட்டருக்கு ரூ.2 வரை விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
இதனால் அரை லிட்டர் பாக்கெட்டுகளின் விலையும் ஒரு ரூபாய் வரை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கால்நடை தீவன விலை உயர்வு, எரிபொருள் செலவு அதிகரிப்பு, போக்குவரத்து கட்டணம் உயர்வு மற்றும் பால் சேகரிப்பு செலவு அதிகரிப்பு ஆகியவை கூறப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் கொள்முதல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அமுல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், "பால் உற்பத்தி மற்றும் செயலாக்கத்திற்கான மொத்த செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் கட்டாயமாக இந்த விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது" என்று நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்த விலை உயர்வு பெரிய அளவில் இல்லை என்றும் அமுல் நிறுவனம் கூறியுள்ளது. லிட்டருக்கு ரூ.2 உயர்வு என்பது சுமார் 2.5 முதல் 3.5 சதவீத உயர்வுதான் என்றும், தற்போதைய உணவுப் பொருட்களின் சராசரி விலை உயர்வை விட இது குறைவானது என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.
பால் விலை உயர்வு காரணமாக தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களிலும் தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தினசரி பால் பயன்பாடு அதிகமாக உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர செலவு கூடும் நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே சமையல் எரிவாயு, காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில், தற்போது பால் விலையும் உயர்ந்திருப்பது நடுத்தர மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பல்வேறு தனியார் பால் நிறுவனங்களும் கடந்த மாதங்களில் விலையை உயர்த்தியிருந்தன. அந்த வரிசையில் தற்போது அமுலும் விலை உயர்வு நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications