அந்த நெய் எங்க நெய் இல்லை.. திருப்பதி லட்டு விவகாரத்துக்கு.. கும்பிடு போட்ட "அமுல்" நிறுவனம்
டெல்லி: திருப்பதி கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு உள்ளிட்ட விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்திய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய் அமுல் நிறுவனத்தினருடையது என்ற செய்தியும் சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், திருமலா திருப்பதி தேவஸ்தானத்துக்கு நாங்கள் இதுவரை நெய் விநியோகம் செய்ததே இல்லை என்று அமுல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளைத் தயாரிக்க விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தியதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு கூறியுள்ளது ஆந்திர அரசியலில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டனர். திருப்பதி லட்டில் நெய்க்குப் பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்தி அசுத்தப்படுத்திவிட்டனர் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு வைத்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி மறுத்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதம் மற்றும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையை சந்திரபாபு நாயுடு காயப்படுத்தி உள்ளார். சந்திரபாபு அரசியலுக்காக எந்த மோசமான செயலையும் செய்யத் தயங்கமாட்டார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி எம்.பி. சுப்பா ரெட்டி கூறியிருந்தார்.
குஜராத்தில் உள்ள தனியார் ஆய்வகம் ஒன்றுக்கு திருப்பதி ஏழுமைலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அந்த சோதனையில், லட்டில் மாட்டுக் கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லட்டில் பயன்படுத்தப்படும் நெய்யின் மாதிரிகளில் பாமாயில், மீன் எண்ணெய், மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டதாக பக்தர்கள் கருதும் லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டது இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும், கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே திருப்பதி தேவஸ்தானத்துக்கு பிரபலமான அமுல் நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இதுகுறித்து, அமுல் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், திருப்பதி தேவஸ்தானத்துக்கு தங்கள் நிறுவனத்தின் நெய் விநியோகிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த அரை நூற்றாண்டுகளாக தங்களின் நிறுவன நெய் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அதிநவீன உற்பத்தி நிலையங்களில் எங்களது நிறுவனத்தின் நெய் சுத்தமான பாலில் தயாரிக்கப்படுகிறது.
அமுல் நெய் உயர்தரமான தூய்மையான பால் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்டுகிறது. எஃப்எஸ்எஸ்ஏஐ வழிகாட்டுதல்படி கலப்படம் கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு தர சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பலகட்ட பரிசோதனைகளுக்குப் பிறகுதான் அமுல் நெய் சந்தைக்கு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது நிறுவனம் குறித்து தவறான தகவல் பரவி வரும் நிலையில், அமுல் நிறுவனம் சார்பில் இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications