நாப்கின் பயன்படுத்துவது தப்பா.. பக்கத்திலேயே வராத கணவர்.. "டாம்பான் ஓகேவாம்.." ஒரு பெண்ணின் குமுறல்
டெல்லி: மாதவிடாய் காலத்தின் போது பெண்களுக்கு இருக்கும் அசவுகரியங்களை சொல்லி மாளாது. மாதந்தோறும் அவர்கள் சொல்லொண்ணா துயரத்தில் உள்ளனர்.
மாதத்தில் 3 நாட்களும் உடலில் சத்து குறைந்து அடிவயிற்று வலி, இடுப்பு வலி, உடல் வலி, தொடை வலி என அவஸ்தைகள் ஏராளம். அதில் பள்ளி, கல்லூரிகள், பணிக்குச் செல்லும் பெண்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
அந்த 3 நாட்களும் சானிட்டரி நாப்கினை பயன்படுத்துவதால் தொடைகளில் அறுத்து சிராய்ப்புகள் ஏற்படும். அந்த வலியுடன் எல்லா வலிகளையும் தாங்கி, ரத்த போக்கானது குறைந்தால்தான் நிம்மதியாக இருக்கும்.

மனைவி
இவையெல்லாம் பெண்கள் சரி, ஆனால் ஆண் ஒருவர் தனது மனைவி மாதவிடாய் காலத்தில் இருக்கும் போது அசவுகரியமாக உணர்வதாக தெரிவிக்கிறாராம். இது குறித்து ரெட்டிட் சமூகவலைதளத்தில் பெண் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், நான் மாதவிடாய் காலத்தில் டாம்பான்களைத்தான் பயன்படுத்தி வந்தேன்.

மருத்துவ காரணங்கள்
ஆனால் மருத்துவ காரணங்களுக்காக தற்போது சானிட்டரி நாப்கினை பயன்படுத்தி வருகிறேன். (டாம்பான் என்றால் மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கின் போது பெண்ணின் பிறப்புறுப்பில் உள்ளே பொருத்தப்படும் ஒரு வகையான பேட் ஆகும். இது வைத்திருப்பதே தெரியாமல் அந்த பெண்ணிற்கு அசவுகரியத்தை கொடுக்காது, ஆனால் சானிட்டரி நாப்கின்கள் வெளிப்புறமாக பயன்படுத்துவது. இது rashesகளை ஏற்படுத்தும். சற்று அசவுகரியமான உணர்வை தரும். இதனால் பல கல்லூரி மாணவிகள் இந்த டாம்பானை பயன்படுத்துகிறார்கள். இது அவ்வப்போது அந்த பேக்கில் உள்ளது போல் மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மாதவிடாய் முடிந்ததும் அதை எடுக்க மறந்துவிட்டால் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பதால் மருத்துவர்கள் இதை பயன்படுத்த வேண்டாம் என்கிறார்கள். )

டாம்பான்
டாம்பானில் இருந்து சானிட்டரி நாப்கினுக்கு மாறியது எனது கணவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நான் டாம்பான் பயன்படுத்தும் போதெல்லாம் என்னுடன் ஒரே கட்டிலில் தூங்கும் அவர் தற்போது நான் சானிட்டரி நாப்கினை பயன்படுத்துவதால் என்னுடன் பெட்டில் படுப்பதற்கு அவர் அசவுகரியமாக உணர்கிறார். எனவே சானிட்டரி நாப்கினை விட்டுவிட்டு டாம்பான் இல்லாவிட்டால் பெட்டில் படுக்காமல் வேறு எங்காவது தூங்குகிறேன் என கூறி சோபாவில் படுத்துக் கொள்கிறார்.

சானிட்டரி நாப்கின்
மேலும் என்னை கேட்காமல் சானிட்டரி நாப்கினுக்கு ஏன் மாறினாய் என கேட்கிறார். ஆனால் நான் அவரிடம் சொல்லிவிட்டேன், என்னால் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாம்பானை பயன்படுத்த முடியாது என தெரிவித்து விட்டேன். இதை பார்க்க எனக்கு சிரிப்புதான் வருகிறது என்கிறார். இந்த பெண்ணின் பதிவுக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உங்கள் உடல் உங்கள் விருப்பம்
"இது உங்கள் உடல் உங்கள் விருப்பம்" இதில் தலையிட கணவருக்கு என்ன உரிமை இருக்கிறது. உங்கள் கணவர் பரிதாபத்துக்குரிய சிறுபிள்ளையை போல் நடந்து கொள்கிறார். சாதாரண உதிர போக்குதானே. உங்கள் கணவர் ஷேவ் செய்து கொள்ளும் போது கன்னத்தில் ரத்தம் வந்துவிட்டால் அவர் தனியாக போய் படுத்துக் கொள்வாரா , தலையில் தலையணைக்கு பதிலாக பையை வைத்துக் கொள்வாரா என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.












Click it and Unblock the Notifications