டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடத்தல்காரர் குறித்த ஆனந்த் மகிந்திராவின் ட்விட்..உற்றுப்பார்த்த நெட்டிசன்ஸ்..சூப்பரா சொல்லிருக்காரே

Google Oneindia Tamil News

டெல்லி: கொல்கத்தா விமான நிலையத்தில் இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம் மதிப்பு கொண்ட (40 ஆயிரம் டாலர்) பணத்தை நூதன முறையில் பாங்கங்கிற்கு கடத்தி செல்ல முயன்று சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவர் பிடிபட்டது குறித்த செய்தியை விளக்கி ஆனந்த் மகிந்திரா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

நாடறிந்த தொழில் அதிபர் ஆனந்த் மகிந்திரா. வாகன தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு உலக அளவிலும் பிரபலமான நிறுவனமாக இருக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மகிந்திரா சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.

தனக்கு கிடைக்கும் சுவாரசிய தகவல்கள் மற்றும் அசாத்திய வேலைப்படுகளுடன் செய்யப்பட்ட படைப்புகள் என தான் கண்டு வியக்கும் பல தகவல்கள தனது ட்விட்டரில் பகிர்ந்து வருகிறார்.

அடுத்த ஷாக்.. பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. கிடுகிடுவென அதிகரித்த புதுச்சேரி பாண்லே நிறுவனம்! அடுத்த ஷாக்.. பால் விலை லிட்டருக்கு ரூ.4 உயர்வு.. கிடுகிடுவென அதிகரித்த புதுச்சேரி பாண்லே நிறுவனம்!

ஆனந்த் மகிந்திரா

ஆனந்த் மகிந்திரா

தன்னம்பிக்கையூட்டும் வகையிலான பதிவுகள்.. எளிய பின்னணியில் இருந்து சாதிக்கும் நபர்கள் குறித்தும் இணையத்தில் அடிக்கடி பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டவர் ஆனந்த் மகிந்திரா. டிவிட்டரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆனந்த் மகிந்திராவை பின் தொடர்ந்து வருகின்றனர். ஆனந்த் மகிந்திராவின் பதிவுகளும் ட்விட்களும் அடிக்கடி இணையத்தில் டிரெண்ட் அடிக்கும். அந்த வகையில், தற்போது கொல்கத்தா விமான நிலையத்தில் இந்திய மதிப்பில் ரூ.32 லட்சம் மதிப்பு கொண்ட (40 ஆயிரம் டாலர்) பணத்தை நூதன முறையில் பாங்கங்கிற்கு கடத்தி செல்ல முயன்று சுங்கத்துறை அதிகாரிகளால் ஒருவர் பிடிபட்டது குறித்த செய்தியை பகிர்ந்துள்ளது வேற லெவலில் ட்ரெட்ண்ட் அடித்துள்ளது.

பிடிபட்ட கடத்தல் நபர்

பிடிபட்ட கடத்தல் நபர்

இது தொடர்பாக தனது ட்விட்டரில் பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா, இந்தியாவில் புதுமையான சிந்தனைக்கும் உருவாக்கத்திற்கும் எந்த பஞ்சமும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து பாங்காக்கிற்கு செல்வதற்காக பயணி ஒருவர் வருகை தந்து இருந்தார்.

40 ஆயிரம் டாலர்

40 ஆயிரம் டாலர்

அமெரிக்க ரூபாயான டாலர் கடத்தல் முயற்சி நடப்பதாக ஏற்கனவே சுங்க இலாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததால் தீவிரமாக கண்காணித்து வந்த அதிகாரிகள், பயணி ஒருவரின் பையை பரிசோதனை செய்தனர். அதில் பான்மசாலா பாக்கெட்டுகள் இருந்தன. அந்த பாக்கெட்டுகள் சற்று வித்தியாசமாக தெரிந்ததால் பாக்கெட்டுகளை உடைத்து பார்த்த அதிகாரிகள்.. அதற்குள் அமெரிக்க டாலரை சுருட்டி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். அதாவது 40 ஆயிரம் டாலர் இப்படி மறைத்து வைத்திருந்தார்.

14 நாட்கள் நீதிமன்ற காவல்

14 நாட்கள் நீதிமன்ற காவல்

கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட நபரை கையும் களவுமாக பிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தற்போது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.. கடத்தல் நபரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளுக்குள் பணம் எப்படி மறைக்கப்பட்டு இருந்ததை விளக்கி வீடியோவையும் சுங்க அதிகாரிகள் வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ செய்தி இணையதளங்களில் பரவியது.

நெட்டிசன்கள் கருத்து

நெட்டிசன்கள் கருத்து

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கும் ஆனந்த் மகிந்திரா, இந்தியாவில் புதுமையான சிந்தனைகளுக்கும் உருவாக்கத்திற்கு எந்த பஞ்சமும் இல்லை. இந்த நபர் தனது படைப்பாற்றலை இன்னும் ஆக்கப்பூர்வமான முறையிலும் சட்டத்திற்கு உள்பட்ட இலக்குகளுக்காக பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் விருப்பப்படுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகிந்திராவின் இந்த ட்விட் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ஆனந்த் மகிந்திரா பதிவுகளுக்கு கீழே தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Anand Mahindra shared the news on his Twitter explaining that a person was caught by the customs officials trying to smuggle money worth Rs 32 lakh (40 thousand dollars) in Indian currency at the Kolkata airport to Bangkok.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X