ஆந்திரா: 'ஜெகன்' கட்சியின் 40 எம்.எல்.ஏக்களுக்கு குறி? காங்கிரஸில் நாளை ஐக்கியமாகும் 'தங்கை' ஷர்மிளா!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா நாளை காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார். டெல்லியில் தமது ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் நாளை இணைக்கிறார் ஒய்.எஸ். ஷர்மிளா.

ஆந்திரா மாநிலத்தின் காங்கிரஸ் முகமாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி. ஹெலிகாப்டர் விபத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி தீவிர அரசியலில் இறங்கினார். அப்போது காங்கிரஸ் கட்சி, ஜெகன் மோகன் ரெட்டிக்கு முதல்வர் பதவியை தர மறுத்தது. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார் ஜெகன் மோகன் ரெட்டி. அப்போது ஜெகனின் ஒட்டுமொத்த குடும்பமும் அவருக்கு ஆதரவாக நின்றது. ஜெகன் மோகன் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில் அவரது தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸை வழிநடத்தி வந்தார். பின்னர் 2109 சட்டசபை தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆந்திராவில் ஆட்சியைக் கைப்பற்றினார் ஜெகன் மோகன் ரெட்டி.

Andhra: CM Jagan’s sister Sharmila to join Congress tomorrow

தெலுங்கானாவில் ஷர்மிளா: இதனையடுத்து தெலுங்கானா அரசியலில் நுழைந்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா. தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.டி.பி. கட்சியை தொடங்கிய ஷர்மிளா, பல்வேறு அதிரடியான போராட்டங்களை நடத்திப் பார்த்தார். பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார். ஆனாலும் தெலுங்கானாவில் ஆதரவு கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ் பக்கம் தாவுவது என முடிவெடுத்திருந்தார் ஷர்மிளா. ஆனால் தெலுங்கானா தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் தலைமை எந்த சிக்னலும் தரவில்லை.

தெலுங்கானா அரசியல்: இதனையடுத்து தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் தேர்தலில் போட்டியிடவில்லை எனவும் அறிவித்தார் ஒய்.எஸ்.ஷர்மிளா. தற்போது தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துவிட்டது. தெலுங்கானாவில் இனியும் ஒய்.எஸ்.ஷர்மிளாவின் கட்சி தேறாது என்பது தெள்ள தெளிவான ஒன்றாகிவிட்டது.

நாளை காங்கிரஸில் இணையும் ஷர்மிளா: இதனால் வேறுவழியே இல்லாமல் தெலுங்கானா அரசியல், தெலுங்கானா அரசியல் கட்சி ஆகியவற்றுக்கு மூட்டை கட்டி விட்டு மீண்டும் ஆந்திரா அரசியலுக்கு திரும்புகிறார் ஷர்மிளா. ஆனால் அண்ணன் ஜெகன் கட்சியில் இணையாமல் இப்போது அண்ணன் ஜெகனின் பரம எதிரியான காங்கிரஸுடன் கை கோர்க்கிறார் ஷர்மிளா. இன்று டெல்லி செல்லும் ஷர்மிளா, காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்திக்கிறார். இந்த சந்திப்புக்குப் பின்னர் காங்கிரஸில் ஷர்மிளா இணைவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். காங்கிரஸில் ஷர்மிளாவும் அவரது கட்சியும் முறைப்படி நாளை (ஜனவரி 4, ஜன.4) இணையும் என கூறப்படுகிறது.

40 அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு குறி: காங்கிரஸில் இணையும் ஷர்மிளா, அண்ணன் ஜெகன் கட்சியின் சில எம்.எல்.ஏக்களையும் கட்சி தாவ வைக்கிறார் எனவும் கூறப்படுகிறது. ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆந்திராவின் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் 80 பேருக்கு மேல் சீட் தரப்போவதில்லை என முன்னரே தெரிவித்துவிட்டார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இதில் 40க்கு மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் உள்ளனராம். இந்த அதிருப்தி எம்.எல்.ஏக்களை ஷர்மிளா தரப்பு டார்கெட் செய்து வருகிறதாம். இவர்களில் சிலரைத்தான் நாளை தம்மோடு டெல்லியில் காங்கிரஸ் இணைய வைக்க திட்டமிட்டுள்ளார் ஷர்மிளா என்கின்றன தகவல்கள்.

ஆந்திரா காங். தலைவராக ஷர்மிளா?: ஆந்திராவில் காங்கிரஸ் கட்சிக்கான முகம் தெரிந்த தலைவர் யாரும் இல்லை. ஆந்திரா அரசியலைப் பொறுத்தவரை ஜெகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பவன் கல்யாணின் ஜனசேனா, பாஜகதான். காங்கிரஸ் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கிறது. இப்படியான நிலையில் ஆந்திரா காங்கிரஸ் தலைவராக ஷர்மிளா நியமிக்கபப்ட்டால் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகப் பெரும் சவாலாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+