ஆந்திராவுக்கு அள்ளி கொடுத்த நிர்மலா சீதாராமன்.. சிறப்பு நிதியாக ரூ.15,000 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய திட்டங்கள் இடம் பெற்று இருந்தது. குறிப்பாக ஆந்திராவுக்கு இதில் பல அறிவிப்புகள் இருந்தன. வளர்ச்சி பணிகளுக்காகச் சிறப்பு நிதி ஒதுக்கீடு தொடங்கிப் பல திட்டங்களை நிர்மலா சீதாராமன் ஆந்திராவுக்காக அறிவித்தார்.
நமது நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிப். 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த முறை லோக்சபா தேர்தல் காரணமாக நிர்மலா சீதாராமன் கடந்த பிப். மாதம் இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்தார்.

ஆந்திரா: லோக்சபா தேர்தலில் வென்று என்டிஏ கூட்டணி ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்றைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கலான நிலையில், அதைத் தொடர்ந்து இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து தேவை எனக் கோரிக்கை விடுத்திருந்தது.
சிறப்பு நிதி: இதற்கிடையே இன்றைய தினம், ஆந்திரா மாநிலத்துக்கு ஏராளமான சிறப்புத் திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ. 15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அவர் அறிவித்தார். குறிப்பாக ஆந்திர தலைநகராக உருவாகும் அமராவதியை நிறுவக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவித்தார்.
மேலும், ஆந்திரப் பிரதேசத்தில் மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவித்த அவர், அங்கே சாலை மேம்பாடு நீர் திட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் ஆந்திராவில் பின்தங்கியுள்ள மாவட்டங்களுக்குக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் அறிவித்தார்.
போலாவரம் பாசனத் திட்டம்: ஆந்திரா மற்றும் அதன் விவசாயிகளின் உயிர்நாடியாகக் கருதப்படும் போலாவரம் பாசனத் திட்டத்திற்கு நிதியுதவி அளித்து, அத்திட்டத்தை நிறைவு செய்வதிலும் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications