டெல்லியில் காந்தி, அம்பேத்கருக்கு மரியாதை... தர்ம போராட்ட தீக்ஷா தொடங்கினார் சந்திரபாபு நாயுடு
Recommended Video

டெல்லி:ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி டெல்லியில் இன்று சந்திர பாபு நாயுடு தமது உண்ணா விரத போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்த கோரிக்கையை நிறைவேற்றாததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய அவர், சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் அடுத்தகட்டமாக டெல்லியில் அவர் இன்று உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, அங்குள்ள ஆந்திர பவனில் தமது உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி உள்ளார். மத்திய அரசின் பாரா முகத்தை கண்டிக்கும் வகையில் கருப்பு வண்ண சட்டை அணிந்து அவர் தமது உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முன்னதாக மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் மரியாதை செலுத்திய சந்திரபாபு நாயுடு, ஆந்திர பவனில் உள்ள அம்பேத்கர் சிலைக்கும் மாலை அணிவித்தார்.
தர்ம போராட்ட தீக்ஷா என்ற பெயரில் நடைபெறும் இந்த போராட்டத்தில் மாநில அமைச்சர்கள் மற்றும் தெலுங்குதேச எம்எல்ஏ, எம்பிக்களும் பங்கேற்றுள்ளன. மேலும் மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகளும் கலந்துகொண்டுள்ளன.












Click it and Unblock the Notifications