ரத்தாகிறது ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல்? வருமான வரித்துறை பரபர அறிக்கை.. தேர்தல் ஆணையம் ஆலோசனை
Recommended Video
டெல்லி: ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத் தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவி வருகிறது.
ஆண்டிப்பட்டி சட்டசபை இடைத் தேர்தலில், அமமுக சார்பில் ஜெயக்குமார், அதிமுக சார்பில், லோகிராஜன், திமுக சார்பில் ஏ. மகாராஜன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு வருமான வரித்துறையினர், ஆண்டிப்பட்டியிலுள்ள அமமுக ஒன்றிய அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த ரெய்டின்போது, ரூ.1.48 கோடி பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டது. சிலர் பணத்தை தூக்கிக்கொண்டு ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட மோதலில் போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். தபால் ஓட்டு ஒன்றும் கூட பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து, வருமான வரித்துறை சார்பில், தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று அறிக்கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்து, தேர்தல் ஆணையம் டெல்லியில் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறது. இதையடுத்து, ஆண்டிப்பட்டியில் தேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவுக்குள் இதுபற்றி முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications