திருப்பரங்குன்றம் விவகாரம்.. தமிழக பாஜக சொதப்பிடுச்சு.. அண்ணாமலை ரிப்போர்ட்.. கண்கள் சிவந்த அமித் ஷா
டெல்லி: டெல்லியில் உள்ள பா.ஜ.க தேசியத் தலைவர்களுக்கு தமிழக பாஜக பிரிவு மீது அதிருப்தி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பலத்த பேச்சு எழுந்துள்ளது. திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தை மாநில பாஜக கட்சி முறையாகக் கையாளத் தவறியதே இதற்குக் காரணம் எனக் கருதுகின்றனர். இவ்விவகாரம் தமிழக பா.ஜ.கவுக்குள் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
முன்னதாக, அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க கூட்டணி இல்லாத போது தமிழக பா.ஜ.கவுக்கு அண்ணாமலை தலைமை தாங்கினார். பின்னர் கூட்டணியை மனதில் வைத்து அண்ணாமலை நீக்கப்பட்டார். நயினார் நாகேந்திரன் புதிய மாநிலத் தலைவரானார். அண்ணாமலை தலைமைப் பதவியை மீண்டும் பெற முயன்று வருகிறார். திருப்பரங்குன்றம் சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள அண்ணாமலை திட்டமிட்டு வருகிறார் என்கிறார்கள்.

அண்ணாமலை பேட்டி
கடந்த வெள்ளிக்கிழமை பாஜக சென்னை அலுவலகத்தில் நீண்ட காலத்திற்கு பின் ஊடகங்களிடம் பேசிய அண்ணாமலை, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது. சிக்கந்தர் தர்கா, நெல்லித்தோப்பு, தர்காவுக்கு செல்லும் பாதை ஆகிய 3 இடங்கள் மட்டுமே தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமானது. 2014, 2017 ஆம் ஆண்டுகளில் வெளியான தீர்ப்புகளை அமைச்சர் ரகுபதி திரித்து உண்மைக்கு புறம்பாக பேசுகிறார்.
தர்காவில் இருந்து 50 மீட்டரில் உள்ள தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என 1ஆம் தேதி ராமரவிக்குமார் கோர்ட்டுக்கு சென்றார். அப்போது மதுரை கிளை நீதிமன்றத்தில், தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது நியாயபடி பார்த்தால் தங்களுக்கு ஆட்சேபம் இருந்தால் தர்கா நிர்வாகம்தான் அந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்க வேண்டும்.
தர்காவுக்கு பக்கத்தில் இருக்கும் தூணில் விளக்கேற்றினால் எங்கள் மனம் புண்படும் என அவர்கள்தான் தீபத் தூணில் தீபம் ஏற்ற எதிர்ப்பு கூறியிருக்க வேண்டும். ஆனால் கோயில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய கோயில் செயல் அலுவலர் மேல்முறையீடு செய்தார். திமுக அரசின் அழுத்தத்தின் காரணமாகவே அவர் மேல்முறையீடு செய்திருக்கிறார். சிக்கந்தர் தர்கா இருப்பதால் சிக்கந்தர் மலை என திமுக அரசு பெயரிட்டு ரசித்தது. சிக்கந்தர் மலை என பெயரிட்டதால் ராமநாதபுரம் எம்பி அங்கு போய் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட போது இந்த திமுக அரசும், கோயில் செயல் அலுவலரும் எங்கே போயிருந்தார்கள், என்று அண்ணாமலை பேசி இருந்தார்.
பாஜக அலுவலகம் அண்ணாமலை
பாஜக அலுவலகத்தில் அண்ணாமலை நேரடியாக செய்தியாளர் சந்திப்பில் பேசுவதற்கு பின் அமித் ஷா கொடுத்த கிரீன் சிக்னலே காரணம் என்கிறார்கள். அதாவது அண்ணாமலைக்கு மீண்டும் முக்கியத்துவம் தர டெல்லி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அண்ணாமலை அமித் ஷாவிடம் பேசிய சில விஷயங்களே இதற்கு காரணம் என்கிறார்கள். நயினார் நாகேந்திரன் பெரிய போராட்டத்துக்குத் தலைமை தாங்கி, கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால், பா.ஜ.க மாநில அளவில் தனது பலத்தை வெளிப்படுத்தியிருக்கும் என அண்ணாமலை ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கக் கிடைத்த பெரிய வாய்ப்பை கட்சி இழந்ததாகவும், தாமதமும் குழப்பமும் கட்சிக்குப் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். ராம ரவிக்குமார் குழுவும் இதே விமர்சனத்தை முன்வைக்கிறது.
அண்ணாமலை டெல்லி இது தொடர்பாக விரிவான அறிக்கை அனுப்பி உள்ளார் . அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை இதை பற்றிய ரிப்போர்ட் ஒன்றை கொடுத்துள்ளார் என்கிறார்கள். அதில், திருப்பரங்குன்றம் விவகாரத்தை பலவீனமாகக் கையாண்டது, குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்தில், தமிழக பா.ஜ.கவின் இமேஜுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என சுட்டிக்காட்டி உள்ளாராம். இதன் காரணமாகவே அமித் ஷா, அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து பேசினார்.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொறுப்பில் இருந்தும், அண்ணாமலையின் திடீர் டெல்லி பயணம், தமிழக தொண்டர்களிடையே குழப்பத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மத்தியத் தலைமை அண்ணாமலையின் கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொண்டதன் தெளிவான அறிகுறியாகவே இது பார்க்கப்படுகிறது.
டெல்லியிலிருந்து திரும்பிய அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதே நிகழ்வில் முன்னாள் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தோன்றினார். இது கட்சியில் ஏற்பட போகும் மாற்றத்திற்கான அறிகுறிகள் என்கிறார்கள்.
-
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு












Click it and Unblock the Notifications