டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் உச்சநீதிமன்றத்தின் 2 மத்தியஸ்தர்கள் முதல் கட்ட பேச்சுவார்த்தை
Recommended Video
டெல்லி: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் தொடர் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்குழுவினருடன் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 2 மத்தியஸ்தர்கள் இன்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கு மேலாக போராட்டம் தொடருகிறது. அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டசபை தேர்தல்களில் ஷாகீன் பாக் போராட்டம் முக்கிய இடம் பிடித்தது.

இந்நிலையில் ஷாகீன் பாக் போராட்டத்துக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், ஷாகீன் பாக் போராட்டத்துக்கு தடை விதிக்கவில்லை.
அத்துடன் இப்போராட்டத்தை வேறு ஒரு இடத்தில் நடத்துவது குறித்து ஆலோசிக்கலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. இதற்காக சஞ்சய் ஹெக்டே, சாதனா ராமச்சந்திரன் ஆகியோரை மத்தியஸ்தர்களாகவும் உச்சநீதிமன்றம் நியமித்தது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இரு மத்தியஸ்தர்களும் ஷாகீன் பாக் போராட்ட களத்துக்கு வருகை தந்தனர். போராட்டக் குழுவினருடன் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாதனா ராமச்சந்திரன், போராட்டக்காரர்களை இன்று சந்தித்து பேசினோம். அவர்கள் விரும்பினாள் நாளையும் பேச்சுவார்த்தை நடத்தலாம்; இல்லையெனில் இன்றுடன் நிறைவு செய்யலாம் என கூறினோம். அவர்கள் நாளையும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறியுள்ளனர் என்றார்.
இதையடுத்து நாளையும் ஷாகீன் பாக் போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications