டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட் நியூஸ்... கொரோனா சிகிச்சைக்கு புதிய மருந்து... இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 2-deoxy-D-glucose என்ற புதிய மருந்தை அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவலின் 2ஆம் அலையால், இந்தியாவில் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதிமுக லெட்டர் பேடு, ஈபிஎஸ் கையெழுத்தும் இல்லை.. ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம்... செமகடுப்பில் ஈபிஎஸ் கோஷ்டி அதிமுக லெட்டர் பேடு, ஈபிஎஸ் கையெழுத்தும் இல்லை.. ஓபிஎஸ் தனி ஆவர்த்தனம்... செமகடுப்பில் ஈபிஎஸ் கோஷ்டி

லேசான கொரோனா பாதிப்பு உடைய நோயாளிகளுக்கு பொதுவாக எவ்வித சிகிச்சையும் தேவைப்படாது. கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை அதிகமாக இருக்கும் நோயாளிகளுக்கு மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படும்.

கொரோனா சிகிச்சை

கொரோனா சிகிச்சை

இருப்பினும், தற்போது வரை கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க ஒரு குறிப்பிட்ட மருந்து இல்லை. பரவலாகப் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துகூட, கொரோனாவால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பையே கட்டுப்படுத்துகிறது. அவை கொரோனா வைரசை அழிப்பதில்லை. அதேபோல ரெம்டெசிவிரை மருத்துவர் ஆலோசனையின்றி எடுப்பது ஆபத்தானது என்றும் வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

புதிய மருந்திற்கு ஒப்புதல்

புதிய மருந்திற்கு ஒப்புதல்

இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 2-deoxy-D-glucose என்ற புதிய மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் இணைந்து இந்த மருந்தை உருவாக்கியுள்ளன.

தூள் வடிவில் இருக்கும் மருந்து

தூள் வடிவில் இருக்கும் மருந்து

மருத்துவ சோதனை முடிவுகளில் இவை கொரோனாவை விரைவாகக் குணப்படுத்துவது உறுதியானதைத் தொடர்ந்து, இதற்கு தற்போது அவசர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தூள் வடிவத்தில் இருக்கும் இந்த மருந்தைத் தண்ணீரில் கரைத்து, கொரோனா நோயாளி எடுத்துக்கொள்ள வேண்டும். இவை கொரோனாவில் இருந்து நோயாளியை விரைவாகக் குணப்படுத்துவது சோதனைகளில் தெரியவந்துள்ளது. மேலும், நோயாளிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உதவியையும் இந்த மருந்து குறைக்கிறது.

மூன்றாம்கட்ட சோதனை

மூன்றாம்கட்ட சோதனை

கடந்த ஆண்டு இந்த மருந்தின் 2ஆம் கட்ட சோதனையில் இவை பாதுகாப்பானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, ஆறு மருத்துவமனைகளில் நடத்தப்பட்ட மூன்றாம்கட்ட சோதனையில் இந்த மருந்து கொரோனா நோயாளிகளை விரைவாகக் குணப்படுத்துவது உறுதியானது. இந்து மருந்தை எடுத்துக்கொள்பவர்கள் விரைவாக கொரோனாவில் இருந்து குணமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DRDO Cleared new drug for Corona treatment Emergency Use
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X