டெல்லி தூதர் டேனியல் ஸ்மித் சார்ஜ் டி அஃபைர்ஸ் ஆக நியமனம்
டெல்லி: அமெரிக்க வெளியுறவுத்துறை பயிற்சி நிறுவனத்தின் இயக்குனராக பணியாற்றி வந்த தூதர் டேனியல் ஸ்மித், இடைக்கால சார்ஜ் டி அஃபைர்ஸ் ஆக பொறுப்பேற்றுக் கொள்ள புதுடெல்லிக்கு புறப்பட்டு உள்ளார்.
இவர், அண்மை காலம் வரை அமெரிக்க வெளியுறவு பொறுப்பு அமைச்சராகவும், வெளியுறவு பொறுப்பு துணை அமைச்சராகவும் பணியாற்றியவர். தூதர் ஸ்மித், வெளிநாட்டு சேவை பணியில் மிக உயர்ந்த பதவியில் பணியாற்றி வருகிறார்.

தூதர் ஸ்மித்தின் நியமனம் இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுடனான எங்கள் கூட்டாண்மைக்கு அமெரிக்காவின் வலுவான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
உலகளாவிய தொற்றுநோயை எதிர்கொள்வது உட்பட, பல்வேறு முன்னுரிமைக்குரிய விஷயங்களிலும் இரு நாடுகளும் தொடர்ந்து முன்னேறுவதை உறுதிப் படுத்தும் வண்ணம் அவர் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை முன்னெடுப்பார்.
அமெரிக்கா இந்தியாவுடன் ஒற்றுமை பாராட்டுகிறது. தூதர் ஸ்மித் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதில் உறுதியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications