வந்தது அறிவிப்பு.. "ஸைடஸ் கெடிலா".. 12-18 வயது சிறுவர்களுக்கான வேக்சின்.. விரைவில் அனுமதி..!

12 வயதுக்கு குழந்தைகளுக்கான தடுப்பூசிகளுக்கு விரைவில் அனுமதி தரப்படுகிறதாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஸைடஸ் கெடிலா நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கவுள்ளது.

தடுப்பூசி நிர்வாகத்தின் தேசிய நிபுணர் குழு தலைவர் என்கே அரோரா 2 நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி தந்திருந்தார்.

அதில், ''சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் விவகாரத்தில் கோவாக்சின் 3-வது கட்ட ஆய்வு தொடங்கியுள்ளது... எப்படி இருந்தாலும் வரும் செப்டம்பர் மாத கடைசிக்குள் இந்த தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டுவிடும் என்று நினைக்கிறேன்...

 தடுப்பூசி

தடுப்பூசி

என் கணக்குப்படி, இந்த ஆண்டின் இறுதியில் அல்லது ஜனவரி- பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் 12 - 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியும். ஆனாலும், இந்த ஸைடஸ் கெடிலா தடுப்பூசி அதுக்கு முன்பே பயன்பாட்டுக்கு வந்துவிடும்... இந்த தடுப்பூசி பயன்பாட்டுக்கான அவசர கால அனுமதி சில வாரங்களுக்குள் கிடைத்துவிடும்... அதன் பிறகு, 12 -18 வயதுடைய சிறார்களுக்கு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் ஸைடஸ் தடுப்பூசி செலுத்தப்படும்.

 பள்ளிகள்

பள்ளிகள்

ஏனென்றால், பள்ளிகள் திறப்பு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். அதன்படியே இன்று ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது... 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஜைடஸ் கெடிலா நிறுவனத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு, மத்திய அரசு கூடிய சீக்கிரம் அனுமதி வழங்க போகிறதாம்.

 ஆய்வுகள்

ஆய்வுகள்

இந்த கொரோனா தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் வயது வந்தோருக்கும் செலுத்தப்பட்டு டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது.. அந்த டெஸ்ட்டின் முடிவுகளும், தடுப்பூசி செலுத்துவதற்கு சாதகமாகவே அமைந்திருக்கிறது.. அதனால்தான் இன்னும் சில நாட்களில் ஸைடஸ் கெடிலா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படுகிறது.. இந்த "ZyCov-D" என்ற இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டால், கொரோனா வைரசுக்கு எதிராக அனுமதி வழங்கப்படும் 5வது தடுப்பூசி இதுவாகும்.

 விண்ணப்பம்

விண்ணப்பம்

இந்த அனுமதி மட்டும் கிடைத்துவிட்டால், வாக்சின் சப்ளை ஆகஸ்ட், செப்டம்பரிலேயே தொடங்கிவிடும் என்கிறார்கள்.. இதுகுறித்து கட்டுப்பாட்டு அமைப்பின் அதிகாரி சொல்லும்போது, " கெடிலா நிறுவனம் அனுமதிக்காக மேற்கொண்ட விண்ணப்பமானது, நிபுணர்கள் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.. அவர்கள்தான் இறுதி மதிப்பாய்வு செய்வார்கள்.. அதற்கு பிறகுதான் அனுமதி தருவார்கள்.. அதற்கு பிறகு, அந்த நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு இந்த வாக்சின் பற்றி பேசுவார்கள்" என்றனர்.

 உற்பத்தி

உற்பத்தி

இந்த ZyCov-D என்பது 3 டோஸ்கள் கொண்ட தடுப்பூசியாகும்... இது பார்மாஜெட் என்ற ஊசி அல்லாத முறையில் செலுத்தப்படும் தடுப்பூசி.. இந்த தடுப்பூசி மருந்தை 2-8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்துதான் பரமாரிக்கப்பட வேண்டும்.. ஆனால், 25 டிகிரி செல்சியஸிலும் கூட அது 3 மாசத்துக்கு தாங்கக்கூடியது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.. மாதத்துக்கு 1 கோடி டோஸ்களை உற்பத்தி செய்ய போகிறோம் என்று ஸைடஸ் கெடிலா ஏற்கனவே நம்பிக்கை தந்திருந்த நிலையில், இந்த தடுப்பூசிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டிருக்கிறது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+