Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மீண்டும் மிரட்டும் கொரோனா.. இன்னொரு பெருந்தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இப்போதைய சூழலில் நாம் பெருந்தொற்றின் மற்றொரு அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியே பலருக்கும் எழுகிறது. இதற்கான பதிலை நாம் விரிவாகப் பார்க்கலாம்.

கடந்த 2019ம் ஆண்டிலேயே கொரோனா பரவினாலும் இந்தியாவில் 2வது அலை தான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. நம்மில் பலரும் நமது அன்பிற்குரியவர்களை இழந்திருந்தோம். அப்போது டெல்டா வேரியண்ட் நாடு முழுக்க மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.

Are we Physically and Mentally Ready for Another Wave as Corona virus is surging

கொரோனா அலைகள்

அதன் பிறகு டிசம்பர் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை ஓமிக்ரான் வேரியண்ட் காரணமாக மூன்றாவது அலை ஏற்பட்டது. இருப்பினும், அதன் பிறகு நாட்டில் பெரியளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனாவில் இருந்து நாம் மெல்ல வெளியே வந்திருந்தோம். இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய சூழலில் நாம் கொரோனாவை கண்டு அச்சப்படத் தேவையில்லை என்ற போதிலும், இப்போது நாம் பெருந்தொற்றின் மற்றொரு அலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோமா என்ற கேள்வியே பலருக்கும் எழுகிறது.

அச்சம் வேண்டாம்

இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் பாரத் அகர்வால் கூறுகையில், "கொரோனா பரவலின் போது பலரும் தடுப்பூசியை எடுத்துக் கொண்டனர். இதனால் பொதுமக்களிடையே தடுப்பாற்றல் மிகவும் வலுவாக உள்ளது. இப்போது JN.1 திரிபு காரணமாகவே வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளது. மக்களிடையே இப்போது இருக்கும் தடுப்பாற்றல் இந்த புதிய திரிபுக்கு எதிராகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் தற்போதைய சூழலில் கூடுதல் வேக்சின் அல்லது பூஸ்டர் எதுவும் தேவையில்லை. நாம் ஏற்கனவே எடுத்துள்ள தடுப்பூசி வைரஸ் பாதிப்பின் தீவிரத்தைக் குறைக்க உதவுகிறது.

முன்னெச்சரிக்கை தேவை

அதேநேரம் எந்தவொரு புதிய கொரோனா திரிபையும் நாம் அலட்சியமாக எடுத்துக் கொள்ள முடியாது. இப்போது JN.1 திரிபால் கேஸ்கள் பெரியளவில் அதிகரிக்கவில்லை என்றாலும் நெரிசலான பகுதிகளில் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது உள்ளிட்ட தேவையான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் எடுக்கலாம். இதுபோன்ற நடவடிக்கைகளே போதுமானதாக இருக்கிறது" என்றார்.

கொரோனா வேக்சின் பலனளிக்குமா?

புதிய கொரோனா திரிபுகளுக்கு கொரோனா வேக்சின் பலனளிக்குமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "பொதுவாக வேக்சின் வழங்கும் தடுப்பாற்றல் படிப்படியாகக் குறையும். ஆனால், இது வழக்கமான ஒன்று தான். அதேநேரம் அவை முழுமையாக மறைந்துவிடாது.. நமது உடலுக்குத் தேவையான பாதுகாப்பை இது கணிசமாக வழங்குகிறது. இப்போது பொதுமக்களிடையே சமூகத்திலும் கூட கணிசமான அளவுக்கு தடுப்பாற்றல் இருக்கிறது. இதை நாம் ஹைபிரிட் இம்யூனிட்டி என்று கூடச் சொல்லலாம். எனவே நாம் அச்சப்படத் தேவையில்லை.

இப்போது பரவும் JN.1 வேரியண்டிற்கு எதிராக வேக்சின் வேலை செய்யாது என்று சொல்ல எந்தவொரு ஆதாரமும் இல்லை. சொல்லப்போனால் முன்பு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் வேக்சின்கள் காரணமாகக் கடுமையான நோய்ப் பாதிப்பு, மருத்துவமனையில் அட்மிட் ஆவது குறையவே செய்யும். சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்து புதிய திரிபுகளையும் வேக்சின் தடுக்காது என்ற போதிலும் அதன் தீவிரத்தையும் பாதிப்பையும் குறைக்கும்" என்றார்.

கொரோனா வைரஸ் உடலை மட்டும் பாதிப்பதில்லை.. அது ஏற்படுத்தும் பாதிப்புகள், தனிமைப்படுத்துதல் சிகிச்சை ஆகியவை மன ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உளவியல் பிரச்சினை

கொரோனா சமயத்தில் நாட்டில் மனநலப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகவும் நகர்ப்புற மக்களே இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஜர்னல் ஆஃப் ஃபேமிலி மெடிசின் அண்ட் பிரைமரி கேர் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. கொரோனா பரவிய முதலாண்டில் பதட்டம் மற்றும் மனச்சோர்வு கேஸ்கள் 25% வரை அதிகரித்ததாக உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.

அதேநேரம் இந்தியாவில் செமி அர்பன் மற்றும் கிராமப்புற பகுதிகளில் வலுவான ஆன்மீக நம்பிக்கை, குடும்ப பிணைப்புகள் இருப்பதால் இங்கு உளவியல் பாதிப்பு குறைவாகவே இருப்பதாக மனநலப் பேராசிரியர் டாக்டர் சுரேஷ் படா மத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நமது இந்திய மரபுகளில் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் உளவியல் பாதிப்புகளைக் குறைக்கிறது" என்றார்.

தயாராக இருக்க வேண்டும்!

இருப்பினும், தொடக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் 2வது அலையின் கொடூரத்தை உணர்ந்தவர்கள் ஆகியோர் இன்னுமே கூட அந்த பாதிப்புகளில் இருந்து முழுமையாக வெளியே வரவில்லை. அர்பன் எனப்படும் நகர்ப்புறப் பகுதிகளிலேயே இதன் பாதிப்பு அதிகம் இருக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்! இதனால் கொரோனாவை சமாளிக்க மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு இணையாக உளவியல் நடவடிக்கைகளும் தேவை என்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+