ஒரு நாளைக்கு பல முறை மலம் கழிக்கறீங்களா.. இந்த மோசமான இதய பாதிப்பாக இருக்கலாம்..! கவனம் தேவை மக்களே
டெல்லி: எப்போதும் அவசரமாக மலம் வருவது போன்ற உணர்வு இருக்கிறதா? எப்போதாவது என்றால் பிரச்சினை இல்லை. ஆனால், எப்போதும் இதுபோன்ற பிரச்சினை இருந்தால், நீங்கள் இந்த இதய பாதிப்பு குறித்துக் கவலைப்பட வேண்டும்.
ஒரு சிலருக்கு எப்போதும் மலம் கழிக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். இது உடலில் அதிக கொலஸ்ட்ரால் சேர்வதன் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
கொலஸ்ட்ரால் தானே என்று நாம் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. இந்த கொலஸ்ட்ரால் நமது தமனிகளில் (arteries) ரத்த ஓட்டத்தைக் கடினமாக்குகிறது. இதனால் சில நேரங்களில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் கூட இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

கொலஸ்ட்ரால்
நமது உடலில் கொலஸ்ட்ரால் என்பது ரத்தத்தில் காணப்படும் ஒரு மெழுகுப் பொருள் ஆகும்.. ஆரோக்கியமான செல்களை உருவாக்க நமது உடலுக்கு கொலஸ்ட்ரால் தேவை தான். ஆனால் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பது ஒருவரின் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும். சில நேரங்களில் இந்த அதிக கொழுப்பு பரம்பரையாக இருக்கும் குறையாகக் கூட இருக்கும். ஆனால், பெரும்பாலான நேரங்களில் இவை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாகவே ஏற்படுகிறது. இருப்பினும், சில எளிமையான முறைகள் மூலம் இதை எளிதாகத் தடுக்கலாம் என்றும் இதற்குச் சிகிச்சையும் ஈஸி என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மலம் கழிப்பது போன்ற உணர்வு
உடலில் சேரும் கொலஸ்ட்ரால் குறித்த ஆய்வுகள் தொடர்ச்சியாகவே நடந்து வருகிறது. இந்த கொலஸ்ட்ரால் காரணமாக இதய தமனி மட்டுமின்றி, குடலுக்குச் செல்லும் தமனி உட்பட உடலில் உள்ள எந்தவொரு தமனியும் பாதிக்கப்படலாம். ஒரு நாளைக்கு ஓரிரு முறைக்கு மேல் மலம் கழிப்பது போன்ற உணர்வு ஏற்பட்டால், அவர்களுக்கு இஸ்கிமிக் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இஸ்கிமிக் இதய நோய் பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கான ஒரு வித முன்னோடி அறிகுறியாகும்.

மாரடைப்பு அபாயம்
இதனால் இதய நோய் மற்றும் மாரடைப்பு ஏற்பட அதிக ஆபத்து உள்ளது. அது மட்டுமின்றி, இதய செயலிழப்பு, நுரையீரல் நோய், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. மலம் வராமல் இருப்பதும் பிரச்சினை தான்.. இப்படி அதிக முறை மலம் வருவதும் பிரச்சினை தான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதய செயலிழப்பால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் குறைந்த அளவு திரவம் உட்கொள்வது, போதிய உடல் செயல்பாடு இல்லாமல் இருப்பவர்களுக்கே ஏற்படுகிறது. இதுபோல உள்ளவர்களுக்கு மலச்சிக்கலும் பொதுவாகவே ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மலச்சிக்கல்
பசியின்மை, நார்ச்சத்து குறைவு, அதிகளவில் மருந்து எடுத்துக் கொள்வது, மற்றும் செரிமான மண்டலத்திற்கு ரத்த ஓட்டம் குறைதல் ஆகியவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும் சில காரணங்கள் ஆகும். அதாவது மலச்சிக்கல் தொடர்ந்து பல காலமாக இருந்தால்... அல்லது ஒரே நாளில் எப்போதும் மலம் வருவதைப் போன்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தால், அது இதய பாதிப்பாக இருக்கலாம் என்றே ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனை செல்வது சிறப்பாக இருக்கும்.

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் சில ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால் இதய பாதிப்பிற்கான ஆபத்து குறையலாம்.. ஒவ்வொரு சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள்.. உணவில் குறைந்த உப்பைத் தேர்த்துக் கொள்ளுங்கள். உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமான உடலைப் பராமரிக்கவும். புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருட்களை உடனடியாக கைவிடுங்கள். முடிந்த வரை வாரத்தின் அனைத்து நாட்களும் உடற்பயிற்சி செய்யுங்கள்.. குறைந்தது 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை
மது அருந்துவதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும்.. அல்லது குறைந்த அளவு மது குடித்துப் பழக்கத்தைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள் மன அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கவும். ஓட்ஸ், பீன்ஸ் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும், வெண்ணெய், தாவர எண்ணெய்கள், ஆலிவ்கள், முந்திரி, பாதம் பிஸ்தா போன்ற unsaturated fats உள்ள உணவுகளைச் சாப்பிடுங்கள். 20 வயதிற்குப் பின்னர், தொடர்ந்து கொலஸ்ட்ரால் அளவை செக் செய்யுங்கள். ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு, முறையாக உடற்பயிற்சி செய்தாலே, இதய பிரச்சினைகளில் இருந்து விலகி இருக்கலாம்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications