டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சாப்பிட்டதும் வயிறு வீங்கியது போல இருக்கா.. இந்த மோசமான கேன்சரா இருக்கலாம்.. அறிகுறிகளை பாருங்க

Google Oneindia Tamil News

டெல்லி: பொதுமக்களிடையே கேன்சர் பாதிப்புகள் இப்போது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கேன்சர் அறிகுறிகளைக் கவனமாக நோட் செய்து உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது ரொம்பவே முக்கியமாகும். மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயின் அறிகுறிகளைப் பார்க்கலாம்.

முன்பெல்லாம் வெகு சிலருக்கு மட்டுமே ஏற்பட்டு வந்த கேன்சர் பாதிப்புகள், இப்போது ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

கேன்சர் பாதிப்புகளை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. விரைந்து சிகிச்சை கொடுத்தால் மட்டுமே கேன்சர் பாதிப்பைக் குணப்படுத்த முடியும். எனவே, அதன் அறிகுறிகளை நாம் கவனமாக நோட் செய்ய வேண்டும்.

fatty liver என்றால் என்ன? சிகிச்சை என்ன? அலட்சியம் செய்தால் புற்றுநோய் வரும்! டாக்டர் பரூக் விளக்கம்fatty liver என்றால் என்ன? சிகிச்சை என்ன? அலட்சியம் செய்தால் புற்றுநோய் வரும்! டாக்டர் பரூக் விளக்கம்

அறிகுறிகள்

அறிகுறிகள்

பல நேரங்களில் கேன்சர் அறிகுறிகள் பெரியளவில் தெரியாமலேயே இருக்கும். பல நேரங்களில் கேன்சர் அறிகுறிகளை நாம் வழக்கமான உடலில் ஏற்படும் பாதிப்பு என நினைத்துவிடுவோம். நிலைமை கையை மீறிச் சென்ற பிறகே இது நமக்கு கேன்சர் அறிகுறிகள் எனத் தெரிய வரும். அதிலும் கணைய புற்றுநோய், வலி மிகுந்த ஒன்றாகும். அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட ஒரு நோயாகவும் இது உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கணைய புற்றுநோயால் பாதிக்கப்படும் நோயாளிகளில் வெறும் ஏழு சதவீத பேர் மட்டுமே சில ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்கின்றனர்.

 கணைய புற்றுநோய்

கணைய புற்றுநோய்

பெரும்பாலும், இது 75 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களுக்குத் தான் அதிகம் காணப்படும். ஆனால், இந்த காலத்தில் இது இளைஞர்களுக்குக் கூட ஏற்படும் அபாயம் உள்ளது. கணைய புற்றுநோயின் சில அறிகுறிகள் உணவு உண்ட பிறகு நமது உடலில் வழக்கமாக ஏற்படும் மாற்றங்களைப் போல இருக்கும் என்பதில் பலரும் இதில் குழம்பிவிடுகின்றனர். அவை என்ன என்பது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம். இந்த அறிகுறிகளைச் சரியாகக் கவனித்து, இவை தொடர்ந்து இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லவும்.

 வயிறு படபடப்பு

வயிறு படபடப்பு

வயிறு படபடப்பு: கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு வயிற்றில் வலி மற்றும் படபடப்பு உணர்வு ஏற்படும். பொதுவாக செரிமானக் கோளாறு பிரச்சினைக்கும் இதேபோல் தான் உடல் இருக்கும். ஆனால், இது வெறும் செரிமான கோளாறு பிரச்சினை இல்லை. கணையம் சரியாகச் செயல்படவில்லை என்பதற்கான எச்சரிக்கை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 வயிற்றில் ஏற்படும் உணர்வு

வயிற்றில் ஏற்படும் உணர்வு

வயிறு பெரிதான உணர்வு: சாப்பிட்ட பிறகு பொதுவாக வயிறு பெரிதானது போல இருக்கத் தான் செய்யும். அதிலும் பாஸ்ட் புட் உணவுகளைச் சாப்பிடும் போது, வாயு மற்றும் திரவம் வயிற்றில் ஏற்படுவதால் வயிறு வீங்கியது போல மாறும். இருப்பினும், பசியின்மை, மிக வேகமாக வயிறு நிரம்புவது, வயிறு வீங்குவது உள்ளிட்ட அறிகுறிகள் அடிக்கடி, அதாவது ஒரு மாதத்திற்கு 12 முறைக்கு மேல் ஏற்பட்டால், அது புற்றுநோயின் அபாயத்தைக் குறிக்கும்.

 செரிமானக் கோளாறு

செரிமானக் கோளாறு

செரிமானக் கோளாறு: பசியின்மை மற்றும் அஜீரணம் ஆகியவை கணைய புற்றுநோயாளிகளுக்கு பொதுவான அறிகுறிகள். ஏனென்றால், புற்றுநோயானது வயிற்றில் உள்ள உணவை உடைக்க உதவும் நொதிகளைக் குறைக்கும்.. இது குடலின் நிலைத்தன்மையையும் மாற்றுகிறது மற்றும் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலை ஏற்படுத்துகிறது.

வயிற்றில் ஏற்படும் சத்தம்: போதிய கணைய நொதிகள் வயிற்றில் சுரக்காத போது வயிற்றில் சத்தம் ஏற்படலாம். இதை நீங்கள் அடிக்கடி கேட்டால், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவரை அணுகவும்.

அறிகுறிகள்

அறிகுறிகள்

கணைய புற்றுநோயாளிகள் பொதுவாக ஏற்படும் அறிகுறிகள்

  • மஞ்சள் காமாலை
  • தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறும்
  • கருமையான சிறுநீர்
  • வெளிர் நிறத்தில் மலம் வெளியேறுவது
  • தோல் அரிப்பு
  • டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படும்
  • மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

English summary
Feeling bloated after meals is one for the pancreatic cancer symptoms: All things to know about pancreatic cancer symptoms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X