எப்போதும் பசிப்பது போலவே இருக்கா.. ஜாக்கிரதையாக இருங்கள்.. இந்த மோசமான பாதிப்பா இருக்கலாம் மக்களே
டெல்லி: நம்மில் சிலருக்கு எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு இருக்கும். இதை நாம் பெரும்பாலும் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால் இது மோசமான ஒரு பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
மாறி வரும் வாழ்க்கை முறை காரணமாக முன்பு ரொம்ப அரிதாக இருந்த நோய்ப் பாதிப்புகள் கூட இப்போது பரவலாக ஏறப்படத் தொடங்கிவிட்டது. இதனால் நாம் நமது உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கூட கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
சரியான நேரத்தில் நாம் உணவை எடுத்துக் கொண்டால் தான் நமக்கு தேவையான சத்துகள் கிடைக்கும். ஆனால், சிலருக்கு எப்போதும் பசிப்பது போன்ற உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அதை நாம் ரொம்பவே கவனமாக ஆராய வேண்டும்.

பசி உணர்வு
பொதுவாக உணவை நாம் எடுத்துக் கொண்ட அதன் பிறகு சில மணி நேரம் கழித்துத் தான் நமக்குப் பசி உணர்வு ஏற்படும். ஆனால், அனைவருக்கும் இதேபோல இருக்காது.. இதற்குப் பல விளக்கங்கள் உள்ளன.. அதாவது நமது உணவில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து போதிய அளவில் இல்லாமல் இருந்தால்... அல்லது மன அழுத்தம், நீரிழப்பு இருந்தால் எப்போதும் பசி இருந்து கொண்டே இருக்கும். இப்படித் தொடர்ந்து பசியுடன் இருப்பது ஒரு கொடிய நோயின் அறிகுறியாகும், இது ஆரம்பத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.

அறிகுறிகள்
வழக்கத்தை விட அதிகமாகப் பசி உணர்வு இருக்கும் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். நமது உடலில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் பசி அதிகம் ஏற்படுகிறது. பொதுவாக அதிக தாகம், எடை இழப்பு மற்றும் சோர்வு உள்ளிட்டவையும் அதிகளவு சர்க்கரையின் அறிகுறியாகும். அதிக பசி, அதிக தாகம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ரத்தத்தில் அதிக சர்க்கரை இருப்பதைக் காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஏன் ஏற்படும்
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் நீரிழிவு பாதிப்பில், இன்சுலின் குறைபாடு காரணமாக ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸால் செல்களுக்குள் நுழைய முடியாது.. அதனால் நீங்கள் உண்ணும் உணவை உடலால் ஆற்றலாக மாற்ற முடியாது, இதனால் பசி அதிகரிக்கும். இந்த பாதிப்பு இருப்பவர்களுக்கு அதிகம் சாப்பிடாமல் மட்டும் பசி உணர்வு போய்விடாது. இது ஏற்கனவே அவர்கள் ரத்தத்தில் இருக்கும் அதிக குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவே செய்யும். அதேபோல சில நேரங்களில் ரத்தத்தில் மிகக் குறைந்த அளவு குளுக்கோஸ் இருப்பதும் கூட பசி உணர்வைத் தூண்டும். ஏனென்றால், குறைந்து இருக்கும் குளுக்கோஸ் அளவை சரி செய்யக் கல்லீரலில் சேமித்து வைக்கப்பட்ட குளுக்கோஸ் ரீலிஸ் ஆகும். இதுவும் பசி உணர்வைத் தூண்டும்.

கட்டுப்படுத்தும் வழி
சாப்பிடாமல் இருப்பது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கவே செய்யும். சரி அப்போது என்ன தான் செய்ய வேண்டும். பசி உணர்வை எப்படி தான் தடுக்க வேண்டும். அதற்கு சில எளிய வழிகள் உள்ளன. பல்வேறு ஆய்வுகளின்படி, மெதுவாகச் சாப்பிடுவது ரொம்பவே நல்லது. அது வயிறு முழுக்க சாப்பிட உதவியாக இருக்கும். பசி உணர்வைக் குறைக்கும்.. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் அதிக எடை கொண்டு இருப்பார்கள், எனவே உணவைச் சரியாக மென்று, மெதுவாகச் சாப்பிடுவது நாம் உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

கவனச்சிதறல்கள்
சாப்பிடும் போது வேறு எதையும் செய்யக் கூடாது. தொலைக்காட்சி மற்றும் மொபைல் போன்ற கவனச்சிதறல்களைத் தவிர்க்கவும்.. இது உங்களை தேவைக்கு அதிகமாக அல்லது குறைவாகச் சாப்பிட வைக்கும். எந்த கவனச்சிதறலும் இல்லாமல் சாப்பிட்டால் சரியாக வயிறு நிரம்பியதும் சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளலாம். மூலிகை அல்லது கீரை வகைகளை அதிகம் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வலுவான நறுமணம் கொண்ட உணவுகள் நமது பசியைக் கட்டுப்படுத்தும்.

தண்ணீர் குடிக்கலாம்
உங்கள் உணவைச் சாப்பிடும் முன்பு ஒரு கிளாஸ் அல்லது இரண்டு கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர், இதனால் பசி ஓரளவுக்குக் குறையும். புரோட்டீன் நிறைந்த மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட உணவைச் சாப்பிடுங்கள்.. அது மெதுவாக ஜீரணமாகும் என்பதால் மீண்டும் பசி உணர்வு ஏற்பட அதிக நேரம் ஆகும். இதன் மூலம் பசி உணர்வைக் கட்டுப்படுத்தலாம்.

ரொம்பவே முக்கியம்
நீரிழிவு நோயாளிகள், உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள எப்போதும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சி செய்து வருவது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உங்கள் எடையைப் பராமரிக்கவும் உதவுகிறது. இதுபோன்ற எளிய ஸ்டெப்ஸ் மூலம் நீரிழிவு பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். நீரிழிவு நோயை நாம் முறையாகக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.. இல்லையென்றால் உயிரே போகும் அபாயம் கூட உள்ளதாக எச்சரிக்கின்றனர்.
-
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம்












Click it and Unblock the Notifications