ராணுவத்திலிருந்து தப்பி ஓடினால் இதுதான் தண்டனை! சொல்லிக்கொள்ளாமல் ஓடியவருக்கு நேர்ந்த கதி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மிகவும் உயர்ந்த ஒழுக்கமும், கட்டுக்கோப்பும் கொண்ட அமைப்பாக ராணுவம் இருக்கிறது. இருப்பினும் இப்பணியில் சேர்ந்த பின்னர் சிலர் சொல்லிக்கொள்ளாமல் தலைமறைவாகி விடுகின்றனர். அப்படி செய்யும் நபர்களுக்கு வழங்கப்படும் தண்டனை கடுமையானதாக இருக்கும். சமீபத்தில் பீகார் ரெஜிமென்டில் பணியாற்றிய வீரர் ஒருவர் திடீரென தலைமறைவானார். அவருக்கு ராணுவ நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை பரவலாக கவனம் பெற்றிருக்கிறது.

லான்ஸ் ஹவில்தார் அபய் குமார் சிங் என்பவர் பீகார் ரெஜிமென்டின், 9வது பட்டாலியனில் பணியாற்றியிருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அவர் ஓய்வு பெற்றிருந்தார். ராணுவத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதாவது பணியில் இருக்கும்போது குற்றம் செய்தால், அவர் பணி ஓய்வு பெற்றாலும், விசாரணை முடியும் வரை ராணுவ சட்டத்திற்கு உட்பட்டு அவர் நடக்க வேண்டும்.

9 3 2019 9 2022 16 69 63 2 3 10-20

3 குற்றச்சாட்டுகள்

அந்த வகையில் அபய் குமார் சிங் மீது மூன்று குற்றச்சாட்டுகள் இருந்தன. ஒன்று அவர் புற்று நோய்க்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதாக கூறிக்கொண்டு, ராணுவ மருத்துவமனையில் இல்லாமல் சொந்த கிராமத்திற்கு சென்றிருக்கிறார். இரண்டாவது குற்றச்சாட்டு சிகிச்சை பெற்றதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்திருக்கிறார். மூன்றாவது குற்றச்சாட்டு, மருத்துவ ஆவணங்களை ராணுவ அதிகாரிகள் எடுத்து சென்றுவிட்டார்கள் என்று பொய் சொன்னது. எனவே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சொல்லிக்கொள்ளாமல் ஓடினால்..

முதல் குற்றச்சாட்டை பொறுத்தவரை, அபய் குமார் சிங் புற்றுநோய் சிகிச்சைக்காக டெல்லி, லக்னோ மற்றும் நாம்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் அங்கிருந்து யாருக்கும் சொல்லிக்கொள்ளாமல், உயர் அதிகாரிகளுக்கு முறையான அறிவிப்பு கொடுக்காமல் எஸ்கேப் ஆகி, கிராமத்தில் தங்கியிருக்கிறார். அதாவது 2019ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி, லக்னோவில் உள்ள கமாண்ட் மருத்துவமனையில் இருந்து விடுப்பு இல்லாமல் சென்று, 2022ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி ராஞ்சியில் உள்ள நாம்கும் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார்.

போலி ஆவணங்கள்

மருத்துவமனையில் மீண்டும் சேர்வதற்கு அவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தியிருக்கிறார். இதுதான் இரண்டாவது குற்றச்சாட்டு. ராணுவச் சட்டம் பிரிவு 69இன் கீழ் இது குற்றமாகும். எனவே இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைக்கு மேஜர் ஜெனரல் பாரத் மெஹ்தானி உத்தரவிட்டிருந்தார். விசாரணையின்போதுதான் இன்னொரு விஷயமும் தெரிய வந்தது. அதாவது மருத்துவ ஆவணங்களை உயர் அதிகாரிகள் குழு எடுத்து சென்றதாக அபய் குமார் சிங் கூறியிருந்தார். ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் ராணுவச் சட்டம் பிரிவு 63ன் கீழ் இது குற்றமாக கருதப்பட்டது.

விசாரணையும் தண்டனையும்

விசாரணையின் முடிவில் முதல் இரண்டு குற்றங்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டன. ஆனால் மூன்றாவது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எனவே 2 குற்றச்சாட்டுகளுக்கு மட்டும் தண்டனை அறிவிக்கப்பட்டது. அதாவது ஒன்பது மாதங்கள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ராணுவ சேவையிலிருந்து நீக்கப்படுவார் என்றும் ராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பொதுவாக ராணுவ பணியிலிருந்து சொல்லிக்கொள்ளாமல் தப்பி ஓடினால் அது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படும். போர் காலத்தில் இப்படி நடந்தால், தப்பி ஓடியவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படும். மற்ற சாதாரண காலங்களில் இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். இவர்களை தேட உள்ளூர் போலீசார் பயன்படுத்தப்படுவார்கள். ராணுவ நீதிமன்ற வாரண்ட் அடிப்படையில், தப்பி ஓடிய ராணுவ வீரரை கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் உண்டு. அதேபோல, தப்பி ஓடியவர்களை தேடும் பணி 10-20 ஆண்டுகள் ஆனாலும் கூட நிறுத்தப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+