பெரும் சோகம்.. லடாக்கில் ராணுவ வாகனம் ஆற்றில் விழுந்து விபத்து.. 9 வீர்கள் உயிரிழப்பு
டெல்லி: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் வாகனத்தில் சென்ற 9 வீரர்கள் பலியாகியிருப்பதாகவும், ஒரு வீரர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்கள் தங்கள் முகாமுக்கு வாகனங்களில் திரும்புவதும் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள இடங்களுக்கு வாகனங்களில் செல்வது வழக்கம். ஆபத்தான மலைப்பாதைகளை கொண்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் மிகவும் சவாலன தட்பவெப்ப நிலையையும் பொருட்படுத்தாது தேசத்தை காக்கும் பணியில் ராணுவ வீரரக்ள் ஈடுபட்டுள்ளனர்.

லாடாக்கை பொறுத்தவரை சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதால் எப்போதும் பாதுகாப்பு அதிகமாக இருக்கும். குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் சீனா அத்துமீறி நுழைய முயன்றது. இதன் தொடர்ச்சியாக அதே ஆண்டு ஜூன் 15-ம் தேதி இருநாட்டுப் படைகளுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு லடாக்கில் சீன எல்லையை ஒட்டிய பகுதியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டது. சீனாவின் அத்துமீறலை முறியடிக்கவும், எல்லையைப் பாதுகாக்கவும், நம் ராணுவ வீரர்கள் அதிக அளவில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர். இந்த நிலையில், இன்று லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற டிரக் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் டிரக்கில் சென்ற ராணுவ அதிகாரி மற்றும் 8 ஜவான்கள் என மொத்தம் 9 பேர் பலியாகினர். ஒரு வீரர் காயத்துடன் மீட்கப்பட்டார். லே- வில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள கியாரி அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் டிவிஷனல் தலைமையகம் கியாரியில் தான் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. இன்று மாலை 4 முதல் 5 மணிக்கும் இந்த விபத்து நேரிட்டுள்ளது. விபத்துக்குள்ளான டிரக் சென்ற போது மேலும் 5 ராணுவ வாகனங்கள் வந்துள்ளன.
அப்போதுதான் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் டிரக் பாய்ந்துள்ளது. இந்த கோர விபத்து நடைபெற்றதும் உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும், 9 வீரர்கள் சடலமாகவே மீட்கப்படதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. தேசத்தை காக்கும் பணியில் ஈடுபட்டு இருக்கும் ராணுவ வீரர்கள், பணியின் போது விபத்தில் சிக்கி பலியானது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications