ரிபப்ளிக் டிவியின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம்- உரிமையாளரும் அர்னாப்தான்... டிவி நிர்வாகம்
டெல்லி: ரிபப்ளிக் ஆங்கில டிவி சேனலின் 82% பங்குகள் மூத்த பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்குரியதுதான்; இதன் முழு உரிமையாளரும் அர்னாப் கோஸ்வாமிதான் என அந்த டிவி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த அர்னாப் கோஸ்வாமி 2016-ல் ரிபப்ளிக் டிவியில் இணைந்திருப்பதாக அறிவித்தார். 2017-ல் ரிபப்ளிக் டிவி தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் ரிபப்ளிக் மீடியா நெட்வொர்க் நிர்வாகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஏஆர்ஜி அவுட்லைர் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 82% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி வசம் உள்ளன. அர்னாப் கோஸ்வாமியின் நிறுவனம் ரிபப்ளிக் டிவியின் நெட்வொர்க் சொத்துகளில் 99% பங்குகளையும் தம் வசம் வைத்திருக்கிறது.
ரிபப்ளிக் டிவியின் பங்குதாரர்கள் குறித்து ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன; ரிபப்ளிக் டிவியின் உண்மையான உரிமையாளர் குறித்தும் தவறான பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அர்னாப் கோஸ்வாமியும் அவரது குடும்பத்தினரும் 2017-ல் ரிபப்ளிக் டிவி தொடங்கப்பட்ட போது 84% பங்குகளை வைத்திருந்தனர்.
இதன் பின்னர் கூடுதல் முதலீட்டுக்காக சிறிய அளவில் பங்குகள் வெளியிடப்பட்டன. 2019-ம் ஆண்டுக்குப் பின்னர் அர்னாப் கோஸ்வாமியின் ஏஆர்ஜி அவுட்லைர் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மட்டும் 82 % பங்குகளை தொடர்ந்து வைத்திருக்கிறது.
ரிபப்ளிக் டிவியின் முழு உரிமையாளரும் அர்னாப் கோஸ்வாமிதான். www.republicworld.com -ன் கீழான டிஜிட்டல் சொத்துகளில் 99% பங்குகள் அர்னாப் கோஸ்வாமி கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அர்னாப் கோஸ்வாமியின் 3 சட்டப்பூர்வமான நிறுவனங்களுமே இந்தியாவில் பதிவு செய்யப்பட்டவைதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications