இதுக்கு தான் படிச்சவரு பிரதமராக வரணும்.. 2000 ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து கெஜ்ரிவால் காட்டம்
டெல்லி : 2000 ரூபாய் நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டது குறித்து டெல்லிமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காட்டமாக பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி வெள்ளிக்கிழமையான நேற்று வெளியிட்ட அறிக்கையின் படி, புழக்கத்தில் உள்ள ₹2,000 ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகின்றன. எனினும் சட்டப்பூர்வ அவை செல்லும். செப்டம்பர் 30, 2023 வரை எந்தவொரு வங்கிக் கிளையிலும் பொதுமக்கள் ₹2,000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம்அல்லது பிற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம் " என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

2000 ரூபாய் நோட்டுக்கள் தற்போதைய நிலையில் செல்லும் எனவே பயப்படத்தேவையில்லை. எனினும் வங்கியில் எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்து 500 ரூபாய் அல்லது வேறு நோட்டுக்களை வாங்கி கொள்ளலாம்.
அதேநேரம் ரொக்க எக்ஸேன்ஞ் என்பது இப்போதைய நிலையில் ₹2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ₹20,000/- வரை கொடுத்து ரிசர்வ் வங்கியில் மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களில் (ROs) நடைமுறைக்கு வருகிறது. ஒரு நாளைக்கு ஒருவரால் 20 ஆயிரம் ரூபாய் வரை தான் ரொக்கமாக எக்ஸேன்ஞ்ச் செய்ய முடியும். அதற்கு மேல் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது. 2000 ரூபாய் நோட்டுக்கள் வரும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2000 நோட்டு திரும்ப பெறப்படுவது ஏன்: "சுமார் 89% ரூபாய் 2000 ரூபாய் நோட்டுகள் மார்ச் 2017 க்கு முன் வெளியிடப்பட்டது. அவற்றின் ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு, மார்ச் 31, 2018 அன்று (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) ஆக இருந்தது. ஆனால் 2000 நோட்டுகள் ₹6.73 லட்சம் கோடியிலிருந்து ₹3.62 லட்சம் கோடியாக தற்போது (மார்ச் 31 2023) குறைந்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே 2000 நோட்டுகள். இந்த மதிப்பை பொதுவாக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது. மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, ₹2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டிருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடி உள்ளார். கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், ரூ.2000 நோட்டுக்ள் கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஓழியும் என்று முதலில் கூறினார். இப்போது 2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்கள். அதனால் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். பொதுமக்கள் அவதிப்படுவது அவருக்கு புரிவதில்லை என்றார்.
இதனிடையே 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் , நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை குறித்த செய்திக் கட்டுரையை தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ள ஜெய்ராம் ரமேஷ், 'எங்கள் செல்ப் ஸ்டைல் விஸ்வகுருவின் (பிரதமர் நரேந்திர மோடி), எப்படீன்னா முதல் எதையும் யோசிக்காம செஞ்சுடுவாரு.. அதுக்கு அப்புறம் தான் அதை பற்றி யோசிப்பாரு" என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேராவும் மத்திய அரசை கடுமையாக சாடியதோடு, "நவம்பர் 8 ஆம் தேதி 2016 இல் வந்த பேய் இப்போது மீண்டும் தேசத்தை வேட்டையாட வந்துள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications