சிறையிலிருந்து வெளியே வந்த கையோடு தேர்தல் பிரசாரம்.. டெல்லியில் ரோட் ஷோ நடத்திய அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் அவர் இன்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜார்க்கண்ட் முதலமைச்சரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இக்கட்சி இந்தியா கூட்டணியில் இருக்கிறது. அதேபோல மார்ச் 21ம் தேதியன்று டெல்லி முதலமைச்சரும், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். முதலமைச்சராக இருப்பவர் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கெஜ்ரிவாலின் கைது, ஆம் ஆத்மி மீதான பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளும் தனது கருத்தை தெரிவித்திருந்தன.
இதனையடுத்து கெஜ்ரிவால் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவின் கீழ் தன்னை கைது செய்தது தவறு என்றும், அமலாக்கத்துறை சட்டவிரோதமாக செயல்பட்டிருக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஸ்வரனா காந்தா சர்மாவின் ஒரு நபர் அமர்வுக்கு முன்னர் விசாரிக்கப்பட்டு வந்து. விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கள் கெஜ்ரிவாலுக்கு சாதகமாக அமையவில்லை. மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
எனவே அவர் உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார். உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீனோ, வேறு எந்த நிவாரணத்தையோ கோரவில்லை. மாறாக, அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை சட்ட விரோதம் என்று கூறியிருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வந்தது.
மே 3ம் தேதி இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றபோது, "கெஜ்ரிவால் மீதான விசாரணை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணை நீண்ட காலம் நடைபெறும் நிலையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால நிவாரணமாக கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிக்க இருக்கிறோம். நாங்கள் இன்னும் ஜாமீன் வழங்கவில்லை. வெறுமென பரிசீலிக்க இருக்கிறோம்" என்று நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதனையடுத்து இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று கறாராக வாதிட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக ஜாமீன் வழங்கப்படும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, எங்களிடம் கெஜ்ரிவாலுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்து பிரமாண பத்திரத்தை அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்தது.
ஆனால் நீதிபதிகள் அமலாக்கத்துறையின் வாதங்களை ஏற்கவில்லை. "கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வழக்குப்பதிவு செய்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில், தேர்தலுக்கு வெகு சமீபத்தில்தான் அவரை கைது செய்திருக்கிறீர்கள். மட்டுமல்லாது இந்த வழக்கின் விசாரணை மேலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
ஆனால் தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. எனவே இந்த காரணங்களை கருத்தில் கொண்டு ஜூன் 1ம் தேதி வரை கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளனர். ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். தெற்கு டெல்லியில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் அவர் பங்கேற்றிருக்கிறார். டெல்லியில் உள்ள 7 லோக்சபா தொகுதிகளுக்கும் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications