ஆக்ஸிஜன் தட்டுப்பாடு.. உபரியாக இருந்தால் எங்களுக்கு கொடுங்கள்.. முதல்வர்களுக்கு கெஜ்ரிவால் கடிதம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் அதிகரிப்பால் மருத்துவ ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு எழுந்துள்ள நிலையில் தங்களிடம் கூடுதலாக உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எங்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என மற்ற மாநில முதல்வர்களுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனாவால் கடந்த சில தினங்களாக டெல்லி மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 20 ஆயிரம் பேர் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரே நாளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 348 பேர் பலியாகிவிட்டனர்.

நாளுக்கு நாள் உயரும் கொரோனா பாதிப்பால் மருத்துவ ஆக்ஸிஜன், மருந்துகள், ஐசியூ படுக்கைகள் ஆகியவற்றுக்கு நகரில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. இன்றைய தினம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சில மணி நேரங்களில் டெல்லியில் 25 பேர் பலியாகிவிட்டனர்.
இந்த நிலையில் ஆக்ஜிஸன் சிலிண்டர்களை தங்களுக்கு கொடுத்து உதவுமாறு அனைத்து முதல்வர்களுக்கும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில் தங்களிடம் கூடுதலாக உள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எங்களுக்கு கொடுத்து உதவுங்கள்.

மத்திய அரசும் எங்களுக்கு உதவினாலும் கொரோனா பரவல் தீவிரமாகிவிட்டால் மேலும் உதவிகள் தேவைப்படுகின்றன. உங்கள் மாநிலத்திலோ மாநில நிறுவனங்களில் இருந்தோ ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எங்களுக்கு அனுப்பினால் பேருதவியாக இருக்கும். இந்த கடிதத்தை உடனடி உயிர் காக்கும் விஷயமாக கருதி உதவுங்கள் என கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications