வேக்சின்.. செங்கல்பட்டுக்கு கிடைக்காத அனுமதி.. குஜராத்துக்கு கிடைத்தது.. மத்திய அரசு கிரீன் சிக்னல்!
டெல்லி: குஜராத்தின் அங்லேஷ்வர் என்ற பகுதியில் உள்ள வேக்சின் உற்பத்தி மையத்திற்கு மத்திய சுகாதாரத்துறை மூலம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு கோவாக்சின் தயாரிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா மூன்றாம் அலை தொடங்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. தற்போது இந்தியாவில் தினசரி கேஸ்களில் எண்ணிக்கை 27 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இது கடந்த மே மாதத்தை விட பல மடங்கு குறைவு என்றாலும், மூன்றாம் அலை தொடங்க அதிக வாய்ப்பு உள்ளதாக எய்ம்ஸ் மற்றும் ஐசிஎம்ஆர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 31,998,158 பேர்கள் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 428,715 பேர் இதுவரை கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

மரணம்
இந்தியாவில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 31,180,968 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஆக்டிவ் கேஸ்களில் எண்ணிக்கை 388,475 ஆக உள்ளது. இந்தியாவில் தினமும் டிஸ்சார்ஜ் ஆகும் நோயாளிகளின் எண்ணிக்கை 41 ஆயிரம் என்ற அளவில் உள்ளது. இதனால் ஆக்டிவ் கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது.

ஆனால்
ஆனால் புதிய உருமாறிய கொரோனா வகைகள் காரணமாக இந்தியாவில் கேஸ்கள் எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. முக்கியமாக டெல்டா மற்றும் டெல்டா ப்ளஸ் வகை கொரோனா காரணமாக கேஸ்கள் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில்தான் இந்தியாவில் வேக்சின் தேவை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 40,19,98,863 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

வேக்சின்
11,37,73,749 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. மொத்தமாக 51,57,72,612 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. இன்று மட்டும் இதுவரை 33,48,750 பேருக்கு வேக்சின் போடப்பட்டு இருக்கிறது. 35,214 அரசு மையங்களில் இந்தியாவில் வேக்சின் போடப்பட்டு வருகிறது. 27,14,78,511 ஆண்களுக்கு இதுவரை இந்தியாவில் வேக்சின் போடப்பட்டுள்ளது. 20, 07, 47, 132 பெண்களுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

எப்படி
இந்த நிலையில் இந்தியாவில் வேக்சின் உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக குஜராத்தில் வேக்சின் உற்பத்தி மையம் ஒன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அங்லேஷ்வர் என்ற பகுதியில் வேக்சின் உற்பத்தி மையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் வேக்சினை உற்பத்தி செய்வதற்காக இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக தமிழ்நாட்டில் செங்கல்பட்டில் உள்ள வேக்சின் உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிக்க தமிழ்நாடு அரசு தீவிரமாக முயன்று வந்தது. செங்கல்பட்டு திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து கோரிக்கை விடுத்து வருகிறார்

கடிதம்
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதினார். மோடியை சந்திக்கும் போது இது தொடர்பாக நேரிலும் பேசி இருந்தார். அதோடு பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் இந்த மையம் குறித்து ஆலோசனை செய்தார். எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சினை உற்பத்தி செய்ய முடியுமா என்று கோரிக்கை வைத்தார். தனியார் நிறுவனம் இதை ஏற்று நடத்தலாம், செலவில் பங்கு ஏற்க நாங்கள் தயார் என்றும் முதல் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

பதில்
தமிழ்நாடு அரசு இது தொடர்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்திற்கு இன்னும் பதில் வரவில்லை. இதில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த உற்பத்தி மையம் 2008 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு, அந்த ஆண்டிலேயே அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. இந்தியாவிலேயே மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் இதுவும் ஒன்றாகும். இந்தியாவின் வேக்சின் தேவையை பூர்த்தி செய்வதில் இது எளிதாக உதவும்.

தமிழ்நாடு
2010-ஆம் ஆண்டிலேயே பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டிய செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம், 95% பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று வரை தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவில்லை. இதனால்தான் ஆட்சிக்கு வந்ததும் புதிய தமிழ்நாடு அரசு இந்த உற்பத்தி மையத்தை எப்படியாவது தொடங்கும் திட்டத்தில் இருந்தது. ஆனால் மத்திய அரசு இதுவரை இதற்கு பதில் எதுவும் அளிக்கவில்லை.

விருப்பம்
அதேபோல் இங்கு வேக்சின் உற்பத்தி செய்ய மத்திய சுகாதாரத்துறையிடம் பாரத் பயோடெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்ததாகவும் தகவல் வந்தது. ஆனால் அதற்கும் எந்த விதமான பதிலும் வரவில்லை. இந்த நிலையில்தான் குஜராத்தில் வேக்சின் உற்பத்திக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. குஜராத்தில் இதுவரை 3,74,57,654 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 2,56,57,690 பேருக்கு மட்டுமே வேக்சின் போடப்பட்டுள்ளது.

போதிய வேக்சின்
தமிழ்நாட்டிற்கு போதிய வேக்சின் சரியாக விநியோகிக்கப்படாதது இதற்கு ஒரு காரணம் ஆகும். குஜராத்திற்கு ஏற்கனவே அதிக அளவில் வேக்சின் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அங்கு புதிய வேக்சின் மையத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது அம்மாநிலத்திற்கு மேலும் வேக்சின் ஒதுக்கீட்டை அதிகரிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தும். இந்தியாவில் அதிகமாக உத்தர பிரதேசத்தில் 5,47,62,023 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 4,73,44,939 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications