இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்ச்.. மீம்ஸ்களை தெறிக்க விட்டு மோதும் ரசிகர்கள்.. இதை பார்த்தீங்களா
டெல்லி: இன்று நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் யார் வெற்றி பெறுவர் என்ற உச்சக்கட்ட டென்ஷன் ஏற்பட்டுள்ள நிலையில், இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் மீம்ஸ்களை போட்டு டுவிட்டரில் மோதி வருகின்றனர்.
கிரிக்கெட் போட்டியை ரசிக்காத, அறியாத இந்தியர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்று சொல்லும் அளவுக்கு இந்தியாவில் கிரிக்கெட் போட்டி ஏகத்துக்கும் பிரபலம். இதே அளவுக்கு பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிக்கு தனி வரவேற்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றது என்றால் இரு நாட்டு ரசிகர்களும் ஏதோ போர் நடப்பது போல வரிந்து கெட்டிக்கொண்டு போட்டியை பார்க்க ஆர்வமாகிவிடுவர். கிரிக்கெட் உலகின் மிகவும் பரபரப்பு மிக்க ஆட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஒட்டு மொத்த கிரிக்கெட் உலகமும் உன்னிப்பாக உற்று நோக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதிலும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இந்தியா -பாகிஸ்தான் இடையே நேரடி தொடர்கள் கடந்த பல ஆண்டுகளாக நடப்பது இல்லை. சர்வதேச தொடர்கள் மற்றும் ஆசிய கோப்பை போன்ற பொதுவான போட்டிகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதனால், ரசிர்கள் மத்தியில் இந்தப் போட்டியைக் காண வெறி கொண்டு காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு துபாயில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்ததால், இன்று நடக்கப்போகும் ஆட்டத்தில் இதற்கு இந்திய அணி பழி தீர்க்கும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை எதிர்பார்த்து ரசிகர்கள் இணைய உலகையும் மீம்ஸ்களால் தெறிக்க விட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணியை கேலி செய்து இணையம் முழுவதும் இன்று காலை முதலே மீம்ஸ்கள் வலம் வருகின்றன. நெட்டிசன்கள் மத்தியில் தீயாய் பரவும் இத்தகைய மீம்ஸ்களில் சிலவற்றை நாம் இங்கே காண்போம்.

பணத்தை எண்ணும் ஸ்டார் ஸ்போர்ட் சிஇஓ
இந்தியா பாகிஸ்தான் போட்டி நடப்பதால் இணையத்தில் இரு நாட்டு ரசிகர்களும் ஒருவொருக்கொருவர் மோதிக்கொண்டு இருக்கின்றனர். அதேவேளையில், ஸ்டார் ஸ்போர்ட் சிஇஓ விளம்பர வருவாயால் கிடைக்கும் பணத்தை எண்ண முடியாமல் அள்ளிக்கொண்டு இருக்கிறார் என்று கேலியாக மீம்ஸ் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

நொய்டா இரட்டை கோபுரங்கள்
அதேபோல், நொய்டா இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்டதால் ஒட்டு மொத்த ஊடகங்களும் தனது கவனத்தை அதன் பக்கம் திருப்பி விட்ட்டதாகவும், இந்தியா - பாகிஸ்தான் போட்டி பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை என்பதை நையாண்டியாக சுட்டிக்காட்டி மீம்ஸ் ஒன்று வெளியாகி நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த மீம்ஸ்களும் காட்டுத்தீ போல இணையத்தில் உலா வருகிறது.

திருமணம் செய்யுங்கள்
இன்று இந்தியா பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. எனவே, இரவு 7.30 மணி முதல் 10.30 மணி இடைவெளியில் உங்கள் பாய் பிரண்ட் உங்களுக்கு மெசேஜ் செய்தால், யோசிக்காமல் அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்ற செய்தியுடன் இணையத்தில் ஒரு மீம்ஸ் டிரெண்டாகி வருகிறது. இதற்கு ஒருவர், 'நீங்க மாற்றி போட்டுருக்கிறீர்கள்.. உண்மையில் அந்த நேரத்தில் மெசேஜ் செய்தால் அவரை திருமணம் செய்ய வேண்டாம் என்றும், ஏனென்றால் அவர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கு கூட விசுவாசமாக இல்லையென்றால் அவர் சிறந்த காதலியாக இருக்க முடியாது" என்று பதிலுக்கு கமெண்ட் அளித்துள்ளார்.

சிறுவர்களுக்குள் சண்டை
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜபர் , தனது ட்விட்டர் பதிவில், இரு சிறுவர்கள் ஆக்ரோஷமாக தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ள முயற்சிப்பதையும் நடுவில் இருக்கும் நபர் இருவரையும் சமாதானம் செய்வது போன்ற வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் ஜெயிக்கும்
பாகிஸ்தான் இன்றைய போட்டியில் ஜெயிக்கும் என்ற பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு உள்ளது. இதை ஸ்க்ரீன் ஷாட் செய்து பதிவிட்டு வரும் இந்திய ரசிகர்கள், அருமையான ஜோக் என்று கலாய்த்து வருகின்றனர். பலர் பாகிஸ்தான் நபருக்கு ஆல் த பெஸ்ட் சொல்லியும் வருகின்றனர்.

டிவிக்களை உடைக்க போகிறீர்கள்
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் எப்படியும் தோற்று விடும்...இதனால், ஆத்திரம் அடையப்போகும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் வீட்டில் உள்ள டிவிக்களை போட்டு உடைக்க போகிறார்கள் என்று ஒரு மீம்ஸ் டிரெண்ட் ஆகி வருகிறது. இதற்கு முன்பு இந்தியாவிடம் தோற்ற போது பாகிஸ்தான் ரசிகர்கள் டிவிக்களை உடைக்கும் காட்சிகளை வைத்து வெளியிடப்பட்ட இந்த பதிவு நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications