நிறைவு பெறும் ஜனநாயக திருவிழா! ஜூன் 1ல் இறுதிக்கட்ட லோக்சபா தேர்தல்.. இன்றுடன் முடிந்தது பிரசாரம்
டெல்லி: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 6 கட்டமாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை மறுநாள் 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் இன்றுடன் லோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நிறைவடைந்தது.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

கடைசியாக 7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாநில வாரியாக பார்த்தால், பீகாரில் வால்மீகி நகர், பஸ்சிம் சம்பரன், பூர்வி சம்பாரண், ஷியோஹர், வைஷாலி, கோபால்கஞ்ச், சிவன், மகாராஜ்கஞ்ச் என 8 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் அம்பாலா, குருக்ஷேத்ரா, சிர்சா, ஹிசார், கர்னால், சோனிபட், ரோஹ்தக், பிவானி-மகேந்திரகர், குர்கான், ஃபரிதாபாத் என 10 தொகுதிகளுக்கும்,
ஜார்கண்ட்டில் கிரிதிஹ், தன்பாத், ராஞ்சி, ஜாம்ஷெட்பூர் என 4 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் சம்பல்பூர், கியோஞ்சர், தேன்கனல், கட்டாக், பூரி, புவனேஸ்வர் என 6 தொகுதிகளுக்கும், உத்தரப் பிரதேசத்தில் சுல்தான்பூர், பிரதாப்கர், புல்பூர், அலகாபாத், அம்பேத்கர் நகர், ஷ்ரவஸ்தி, டோமரியகஞ்ச், பஸ்தி, சந்த் கபீர் நகர், லால்கஞ்ச், அஸம்கர், ஜான்பூர், மச்லிஷாஹர், பதோஹி என 14 தொகுதிகளுக்கும்
மேற்கு வங்கத்தில் தம்லுக், காந்தி, கட்டல், ஜார்கிராம், மேதினிபூர், புருலியா, பாங்குரா, பிஷ்ணுபூர் என 8 தொகுதிகளுக்கும், டெல்லியில் சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி, கிழக்கு டெல்லி, புது டெல்லி, வடமேற்கு டெல்லி, மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி என 7 தொகுதிகளுக்கும், ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக்-ரஜௌரி தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது ஜூன் 1ம் தேதி 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. எனவே இன்றுடன் தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்கு வந்தன.
உத்தரப் பிரதேசம் (13 தொகுதிகள்), பீகார் (8 தொகுதிகள்), பஞ்சாப் (13 தொகுதிகள்), ஜார்கண்ட் (3 தொகுதிகள்), சண்டிகர் (1 தொகுதி), மேற்கு வங்கம் (9 தொகுதிகள்), ஒடிசா (6 தொகுதிகள்), மற்றும் இமாச்சலப் பிரதேசம் (4 தொகுதிகள்) என ஏழு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 57 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு ஜூன் 1ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதற்கான பிரசாரங்கள் இன்றுடன் நிறைவடைந்தன. இதில் உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மிகுந்த கவனம் பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் தொக்காக 80 தொகுதிகள் இருக்கின்றன. லோக்சபா தேர்தலில் வெற்றிப் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் உ.பியை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். எனவே பாஜக சுற்றி சுற்றி இங்கு பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது.
அதேபோல பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 32 தொகுதிகளுக்கு ஏற்கெனவே தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் தற்போது மீதமுள்ள 8 தொகுதிகளை பாஜக ஃபோக்கசஸ் செய்து வருகிறது. இது தவிர பஞ்சாபில் ஆம் ஆத்மியை முடிவுக்கு கொண்டு வர பாஜக வேலை செய்து வருகிறது. இருப்பினும் ஆம் ஆத்மி விட்டுக்கொடுக்காமல் சண்டை செய்து வருகிறது.
மேற்கு வங்கத்தை பொறுத்த அளவில், இதுவரை நடைபெற்ற தேர்தலில் அதிகமாக வாக்குகள் பதிவாகியுள்ளன. எனவே இந்த தேர்தல், திரிணாமுல் காங்கிரசுக்கு முடிவு கட்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. இப்படியாக தேர்தல் சூழல் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இந்த பரபரப்புகள் இன்றுடன் நிறைவடைந்தன.












Click it and Unblock the Notifications