ஏப்ரல் 19ல் லோக்சபா தேர்தல்.. இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்! முக்கிய அறிவிப்புகளுக்கு வாய்ப்பில்லை
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் வெளிவர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது.
எதிர்வரும் லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நேருவுக்கு பின்னர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் தலைவர் எனும் பெருமையை நரேந்திர மோடி பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டில் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் 100 ஆண்டுவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியம். எனவே எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

மட்டுமல்லாது இந்த தேர்தலில் 3ல் 2 பங்கு இடங்களை கைப்பற்ற பாஜக முயன்று வருகிறது. அதாவது நாடு முழுவதும் 400 தொகுதிகளை கைப்பற்றுவதே இதன் இலக்காகும். இந்நிலையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில், லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில், மோடி தலைமையில் இன்று இந்த கூட்டம் நடைபெறுகிறது.
ஏற்கெனவே சமீபத்தில் நடந்த கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட முக்கிய முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் எந்த அறிவிப்பும் வெளிவர வாய்ப்பில்லை என்று சொல்லப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் புதிய அறிவிப்புகள் வெளிவராது.
அதேநேரம், தேர்தலை எதிர்கொள்வது குறித்த பல்வேறு விஷயங்கள் இதில் விவாதிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக எதிர்க்கட்சிகள் மீதான விசாரணை அமைப்புகளின் நடவடிக்கை பெரிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பத குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்.
இது தவிர, மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் விவகாரம், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி, பீகாரில் நிதிஷ் குமாருடன் சலசலப்பு, பஞ்சாபில் கூட்டணிக்கே ஆல் இல்லாது போன்ற விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
டிரம்ப் உடைத்த சர்ப்ரைஸ்.. "மோடி என் நண்பன்".. விரைவில் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications