டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உயரும் விலை.. நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு அவசர தடை.. மத்திய அரசு உத்தரவு

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்புக்கு இடையே நாடு முழுக்க உற்பத்தி துறை பெரிய சரிவை சந்தித்துள்ளது. முக்கியமாக அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் குறிப்பிட்ட நேரத்தில் மக்களிடம் சென்று சேராத வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

As the prices started increasing, Export of Onion all over India banned

இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. நாடு முழுக்க கடந்த ஒரு வாரமாக வெங்காய விலை உயர்ந்து வருகிறது. டெல்லியில் வெங்காய வரத்து குறைந்த காரணத்தால் அங்கு வெங்காய விலை கிலோ ரூ. 40க்கு விற்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெங்காய விலை கிலோ ரூபாய் 50 ஆக உள்ளது.

இந்த விலை வரும் நாட்களில் கடுமையாக உயரலாம். குளிர் காலத்தில் வெங்காய கையிருப்பு குறைந்து விலை விண்ணை தொடலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அறச்சீற்றம்.. நீங்கள் திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நாயகன்தான்.. சூர்யாவை பாராட்டிய சீமான்!அறச்சீற்றம்.. நீங்கள் திரையில் மட்டுமல்ல.. நிஜத்திலும் நாயகன்தான்.. சூர்யாவை பாராட்டிய சீமான்!

அதன்படி மறு உத்தரவு வரும்வரை வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய முடியாது. அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெங்காயத்தை வெட்டி,துண்டு துண்டாகாவும், பொடியாகவும் ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படவில்லை.

பொதுவாக வெளிநாடுகளுக்கு தடை இன்றி ஏற்றுமதி செய்யப்படும் பெங்களூர் ரோஸ் வெங்காயம், கிருஷ்ணாபுரம் வெங்காயம் இரண்டுக்கும் இந்த முறை தடை விதிக்கப்பட்டுள்ளது. மழை, வெள்ளம் காரணமாக வெங்காய உற்பத்தி குறைந்ததே இதற்கு காரணம் என்கிறார்கள்.

English summary
As the prices started increasing, the Export of Onion all over India banned with immediate effect.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X