வக்பு வாரிய சட்டத் திருத்தம்.. “நீங்கள் முஸ்லிம்களின் எதிரி!” மத்திய அரசு மீது அசாதுதீன் ஓவைசி சாடல்
டெல்லி: வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா கடும் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில், "முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா ஒரு சான்று" என அசாதுதீன் ஓவைசி குற்றம்சாட்டியுள்ளார்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் வரும் வருவாயானது மசூதி, இஸ்லாமியர்களின் கல்வி மேம்பாடு உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதற்காக கடந்த 1995ம் ஆண்டு வக்பு வாரிய சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தில்தான் பல முக்கிய திருத்தங்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்டிருக்கிறது.

இந்த சட்ட திருத்த மசோதாவில் வக்பு வாரியங்களின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மை, வாரியத்தில் இஸ்லாமிய பெண்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வது, வாரியத்தின் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது உட்பட பல்வேறு முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒரு சொத்து வக்பு வாரிய சொத்தா என்பதை முடிவு செய்வதற்கான வாரியத்தின் அதிகாரங்கள் தொடர்பாக தற்போதைய சட்ட பிரிவு 40ஐ இந்த மசோதா தவிர்க்க முயற்சிக்கிறது. வாரியத்தின் அதிகாரத்தை திருத்த மசோதா மட்டுப்படுத்தியுள்ளது. வக்பு வாரிய சொத்துக்களுக்கு உரிமை கோரும்போது அதனை ஆய்வு செய்து உறுதி செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
வாரியத்தில் உள்ள அனைத்து சொத்துக்களையும், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் முன்னிலையில் முறைப்படி பதிவு செய்து அதன் விவரங்களை வக்பு வாரிய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்ற திருத்தமும் இடம்பெற்றுள்ளது. இப்படி பல திருத்தங்கள் வக்பு வாரியத்திற்கு எதிரான, சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், "ஒன்றிய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, அரசியல் அமைப்பின் அடிப்படை கோட்பாடுகள் மீதான தாக்குதல். ராமர் கோயில் நிர்வாகத்தில் இந்து அல்லாதவர்கள் இடம்பெற முடியும் என்று யாராவது நினைத்துக்கூட பார்க்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பி விமர்சித்துள்ளார்.
இந்த திருத்த சட்ட மசோதா மீது உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, "வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதா, இஸ்லாமியர்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல மனித இனத்துக்கே எதிரானது. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்ற நம்பிக்கையை மக்கள் இழந்துவிடுவர். எதற்காக ஒரு மதத்தின் உரிமையில் மற்றொரு மதத்தினர் தலையிட வேண்டும்? அரசு சொத்துகள் வக்பு வாரியத்திடம் இருந்தால் அது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என்பது ஏற்கத்தக்கதல்ல" என்று விமர்சித்துள்ளார்.
இவர்களை தொடர்ந்து பேசிய அசாதுதீன் ஓவைசி, "இந்த மசோதா அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25 வது பிரிவுகளின் கொள்கைகளை மீறுகிறது. இந்த மசோதா பாரபட்சமானது மற்றும் தன்னிச்சையானது. இந்த மசோதாவை கொண்டு வந்ததன் மூலம் நீங்கள் (மத்திய அரசு) தேசத்தை ஒன்றிணைக்காமல் பிளவுபடுத்தும் வேலையை செய்து வருகிறீர்கள். நீங்கள் முஸ்லிம்களின் எதிரி என்பதற்கு இந்த மசோதா ஒரு சான்று" என்று கூறியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பின் 14, 15 மற்றும் 25 வது பிரிவுகள் சமத்துவம், பாகுபாடு இல்லாமை மற்றும் மத சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications