டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித்ஷாவின் மப்ளர் விலை எவ்வளவு தெரியுமா?.. ராகுல் மீதான டிசர்ட் விமர்சனத்திற்கு அசோக் கெலாட் பதிலடி

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அணிந்திருந்த டீசர்டின் விலை 41 ஆயிரம் என்று பாஜக விமர்சித்த நிலையில், அமித்ஷா அணிந்து இருக்கும் மப்ளரின் விலை 80 ஆயிரம் என்று காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் பதிலுக்கு விமர்சித்துள்ளளார்.

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி நாடு முழுவதும் பாரத் ஜோடா என்ற பெயரில் பாத யாத்திரையை மேற்கொண்டுள்ளார்.

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடந்தே செல்கிறார். கன்னியாகுமரியில் இருந்து நடைபயணத்தை அவர் தொடங்கிய போது அவர் அணிந்திருந்த டீசர்ட்டில் விலை குறித்து பாஜக கருத்து தெரிவித்தது.

 மக்களவை தொகுதிகளை அதிகரிக்க பாஜக அரசு திட்டம்! 545 டூ 888 எம்.பி.க்கள்! தமிழக காங்கிரஸ் புது தகவல்! மக்களவை தொகுதிகளை அதிகரிக்க பாஜக அரசு திட்டம்! 545 டூ 888 எம்.பி.க்கள்! தமிழக காங்கிரஸ் புது தகவல்!

 ராகுலின் டீசர்ட் 41 ஆயிரம்

ராகுலின் டீசர்ட் 41 ஆயிரம்

அதாவது ராகுல் காந்தி தனது நடைபயணத்தின் போது அணிந்து இருந்த டி சர்ட் 41 ஆயிரம் ரூபாய் மதிப்புடையது என்று பாஜக விமர்சித்தது. இந்த விவகாரம் பாஜக - காங்கிரஸ் இடையேயான கருத்து மோதலுக்கு வித்திட்டது. இரு கட்சிகளும் மாறி மாறி இந்த விவாரத்தில் விமர்சித்து வந்தனர். பாஜகவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ், மோடி 10 லட்சம் மதிப்புள்ள சூட் அணிந்ததாக விமர்சித்தது. மேலும், ராகுலின் யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பை கண்டு நடுங்கும் பாஜக இத்தகைய தரம் தாழ்ந்த பொய்யான விமர்சனங்களை எழுப்பியுள்ளதாக கூறியது.

ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கோட்

ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கோட்


தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி இது குறித்து கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட டீசர்டை தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார். அந்த டீசர்ட்டின் விலை 40 ஆயிரமும் இல்லை.. 4 லட்சமும் இல்லை.. ராகுல் காதியின் நடைபயணத்திற்காக தான் திருப்பூரில் இந்த டீசர்ட்கள் தயாரிக்கப்பட்டது. பிரதமர் மோடி தான் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கோட்-ஐ அணிந்துள்ளார்'' என்று விமர்சித்தார்.

அமித்ஷாவின் மப்ளர் விலை

அமித்ஷாவின் மப்ளர் விலை

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசோக் கெலாட், அமித்ஷா அணிந்து இருந்த மப்ளரின் விலை 80 ஆயிரம் ரூபாய் என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அசோக் கெலாட் கூறியதாவது: - ''ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாரத் ஜோடோ யாத்திரையால் அவர்களுக்கு என்ன பிரச்சினை?.. ரூ.2.5 லட்சம் மதிப்பு மிக்க சன்கிளாஸ், ரூ 80 ஆயிரம் மதிப்புடைய மப்ளர் அணிந்து ராகுல் காந்தியின் டி சர்ட் விலை பற்றி பேசுகிறார்கள்.

 பாஜக கவலையில் உள்ளது

பாஜக கவலையில் உள்ளது


குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அணிந்து இருக்கும் மப்ளரின் விலை ரூ 80 ஆயிரம். பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் அளப்பறிய ஆதரவைக் கண்டு பாஜக கவலையில் உள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்கள் பணிகளை எல்லாம் விட்டு விட்டு ராகுலை விமர்சித்து வருகின்றனர்'' இவ்வாறு அவர் கூறினார்.

English summary
Congress leader Ashok Gehlot has criticized the price of the t-shirt worn by former Congress president Rahul Gandhi for 41 thousand while the price of the muffler worn by Amit Shah is 80 thousand.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X