ராஷ்மிகா டீப் ஃபேக்.. விரைவில் புதிய சட்டம்! அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை கொண்டு டீப்ஃபேக் தொழில்நுட்ப உதவியுடன் ஆபாச வீடியோ ஒன்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து டீப்ஃபேக் பிரச்னையை எதிர்கொள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தொழில்நுட்பங்கள் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கு அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளும் சேர்ந்தே வளர்கிறது. தொடக்கத்தில் மொபைல் போன் வந்தபோது, குரலை மாற்றி பேசி ஏமாற்றினார்கள். இப்போதும் கூட அது தொடர்கிறது. அதேபோல புகைப்படங்களை மார்ப்பிங் செய்து ஏமாற்றும் தொழில்நுட்பம் உருவானது. இதனால் ஏராளமான குற்ற சம்பவங்கள் நடந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் உஷாரான மக்கள் இது போன்ற எடிட் செய்யப்பட்ட படத்தை பார்த்தவுடன் மார்ப்பிங் செய்யப்பட்ட படம் என்பதை தெரிந்துக்கொண்டனர்.

Ashwini vaishnaw has said that a new law will be enacted soon to curb deepfake scams

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து டீப்ஃபேக் தொழில்நுட்பம் தற்போது பீக்கில் இருக்கிறது. இதில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா சிக்கினார். கருப்பு உடையில் ராஷ்மிகா லிஃப்டுக்குள் வருதை போன்ற வீடியோ சமீபத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டது. குறிப்பாக x சோஷியல் மீடியா தளத்தில் மட்டும் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். ஆனால் இது போலி வீடியோ என்பது பலருக்கும் தெரியவில்லை.

இது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கமளித்திருந்தனர். அதாவது இந்த வீடியோவில் இருப்பவர் சாரா பட்டேல். இவர் ஒரு பிரிட்டீஷ்-இந்திய பெண்மணி. கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதியன்று இவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில்தான் அவர் லிஃப்டுக்குள் வருதை போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் சாராவின் முகத்திற்கு பதில் ராஷ்மிகா மந்தனாவின் முகம் மட்டும் மாற்றப்பட்டிருக்கிறது என்று ஆதாரத்துடன் விளக்கியிருந்தனர்.

இதனையடுத்து டீப்ஃபேக் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்து. இந்நிலையில் இது குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பேஸ்புக், டிவிட்டர் (x) உள்ளிட்ட சமூக ஊடகங்களின் நிர்வாகிகள், அரசு அதிகாரிகள், இணைய பாதுகாப்பு வல்லுநர்கள் பங்கேற்றிருந்தனர்.

இதில், டீப்ஃபேக்குகளைக் கண்டறிதல், அது வேகமாக பரவுவதை தடுத்தல், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளை வலுப்படுத்த முடிவுவெடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல டீப்ஃபேக் மூலம் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் வைஷ்ணவ் கூறியுள்ளார். மேற்கண்ட முடிவுகளை அரசு மற்றும் சோஷியல் மீடியாக்கள் தரப்பிலும் உறுதியாக பின்பற்ற ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாக வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இந்த ஆலோசனை கூட்டம் மூலம் இனி வரும் காலத்தில் இந்த டீப்ஃபேக் பிரச்னைக்கு உரிய தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+