அசாமில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் பாஜக.. 85 இடம் வரை கிடைக்கும்.. இந்தியா டுடே எக்சிட் போல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி : அசாமில் 75 முதல் 85 இடங்களை கைப்பற்றி பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என இந்தியா டுடே வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டபை தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 27 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 6 வரை 3 கட்டங்களாக நடத்தப்பட்டது. இதன் முடிவுகள் மே 2 ம் தேதி வெளியாக உள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களை இந்தியா டுடே இன்று வெளியிட்டுள்ளது.

Assam exit poll: BJP likely to win 75-85 predicts India Today-Axis My India

இதன் படி பாஜக கூட்டணி 75 முதல் 85 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கும். காங்கிரஸ் கூட்டணி 40 முதல் 50 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக அமரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு ஒன்று முதல் 4 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016 ம் ஆண்டு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 86 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது.

இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இணைந்து இந்த கருத்துக்கணிப்புக்களை நடத்தி உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+