இறங்கி வரும் காங்கிரஸ் தலைமை.. அதிருப்தி குழு தலைவர் குலாம்நபி ஆசாத்-சோனியா காந்தி சந்திப்பு
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ஜி23 எனப்படும் அதிருப்தியாளர்கள் குழுவின் தலைவர் குலாம்நபி ஆசாத் இன்று டெல்லியில் சந்தித்தார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி கட்டமைப்பில் என்ன மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என விவாதிக்கப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
5 மாநில சட்டசபை தேர்தல்களில் படுதோல்வி அடைந்த பின்னர் காங்கிரஸ் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது. முதல் கட்டமாக 5 மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர்களை ராஜினாமா செய்ய இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிருப்தியாளர்கள் குழுவின் மூத்த தலைவர் பூபிந்தர்சிங் ஹூடா, ராகுல் காந்தியை சந்தித்தார். பின்னர் குலாம்நபி ஆசாத்தையும் ஹூடா சந்தித்து பேசினார். மேலும் 5 மாநில தேர்தல் தோல்விக்குப் பின்னர் ஜி23 அதிருப்தியாளர்கள் குழு தலைவர்கள் 3 முறை ஆலோசனை நடத்தி இருந்தனர்.

கலகக் குரல் கபில் சிபல்
அதிருப்தி குழுவைச் சேர்ந்த கபில் சிபல், சோனியா காந்தி பதவியை விட்டுத் தர வேண்டும். புதியவர் ஒருவர் பதவிக்கு வர வேண்டும். செயற்குழு உறுப்பினர்கள் மட்டுமே கட்சியை சேர்ந்தவர்கள் அல்ல. செயற்குழுவில் இடம்பெறாத நாங்களும் இருக்கிறோம் எங்கள் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றார்.

ப.சிதம்பரம் பதிலடி
ஆனால் மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம், அதிருப்தியாளர்கள் கட்சியை உடைத்துவிடக் கூடாது. சோனியா காந்தி குடும்பம் மட்டுமே தேர்தல் தோல்விக்கு பொறுப்பு அல்ல. அனைவரும்தான் பொறுப்பேற்க வேண்டும். ஆகஸ்ட் மாதத்தில் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ராஜினாமா செய்ய சொல்வது எப்படி சரியாக இருக்கும்? அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக கட்சி பலவீனமாக உள்ள மாநிலங்களில் கட்சி நிர்வாக அமைப்புகளை கலைத்துவிட்டு புதிய கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என கூறியிருந்தார்.

சோனியா-குலாம்நபி சந்திப்பு
இந்த நிலையில் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் குலாம்நபி ஆசாத் சற்று முன்னர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிருப்தியாளர்களின் குழுவின் தலைவராக இருந்த குலாம்நபி ஆசாத் மீது சோனியா காந்தி கடும் கோபத்தில் இருந்தது. அதனால் அவரது கட்சி பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்.பி. பதவியும் கொடுக்கப்படவில்லை. மேலும் பாஜகவுடன் குலாம் நபி ஆசாத் நெருக்கமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. பாஜக சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக குலாம் நபி ஆசாத் நிறுத்தப்படலாம் எனவும் கூறப்பட்டு வந்தது.

காங். மேலிடம் தீவிரம்
இப்பின்னணியில் இன்று சோனியா காந்தியை குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசியிருக்கிறார். இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி கட்டமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறைதான் காங்கிரஸ் மேலிடம் சற்று இறங்கி வந்து கட்சியை சீரமைப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுவதாகவும் மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications