'ஓட்டு' கனவில் பாஜக! அகவிலைப்படி உயர்வு, ரயில்வே போனஸ், விவசாயிகளுக்கு குட் நியூஸ்- கேபினட் முடிவு!
டெல்லி: 5 மாநில சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் போனஸ், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றுக்கு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, ரயில்வே ஊழியர்களுக்கான 78 நாட்கள் போனஸ் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது:
ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை உயர்வு: 2024-25 சந்தைப் பருவத்தில் ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மைசூர் பயறு வகைக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.425 ஆகவும், கடுகுக்கு குவிண்டாலுக்கு ரூ.200 ஆகவும் குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கோதுமை மற்றும் குங்குமப்பூவுக்குக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.150 உயர்த்தப்படுகிறது. பார்லி மற்றும் கடலைக்கு முறையே குவிண்டால் ஒன்றுக்கு ரூ.115 மற்றும் ரூ.105 உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எவ்வளவு அதிகரிப்பு?: 2024-25 சந்தைப்பருவத்திற்கான ரபி பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிப்பு என்பது, 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் அறிவிப்பின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலையை அகில இந்திய அளவில் மதிப்பிடப்பட்ட சராசரி உற்பத்திச் செலவை விட குறைந்தது 1.5 மடங்கு அளவில் நிர்ணயிக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொண்டுள்ளது. இதையடுத்து கடுகுக்கு 98 சதவீதம்; பருப்புக்கு 89 சதவீதம்; உளுந்துக்கு 60 சதவீதம்; பார்லிக்கு 60 சதவீதம்; குங்குமப்பூவுக்கு 52 சதவீதம் அளவுக்கு விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதுடன், பலவகையான பயிர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும்.
( உதாராணமாக கோதுமை குவிண்டால் கொள்முதல் விலை ரூ2,125 -ல் இருந்து ரூ2,275; மைசூரு பருப்பு குவிண்டால் கொள்முதல் ரூ6,000-ல் இருந்து ரூ6,425 ஆக உயரும்)
ரயில்வே ஊழியர் போனஸ்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2022-23 ஆம் நிதியாண்டிற்கான 78 நாட்கள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையை (போனஸ்) தண்டவாளப் பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன், அமைச்சகப் பணியாளர்கள் மற்றும் பிற குழு 'சி' பிரிவு ஊழியர்களுக்கு (ஆர்.பி.எஃப்/ ஆர்.பி.எஸ்.எஃப் பணியாளர்கள் நீங்கலாக) வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.ரயில்வே ஊழியர்களின் இந்தச் சிறந்த செயல்திறனை அங்கீகரிக்கும் வகையில் 11,07,346 ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.1968.87 கோடியை உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 2022-2023-ம் ஆண்டில் ரயில்வேயின் செயல்திறன் மிகவும் சிறப்பாக இருந்தது. ரயில்வே 1509 மில்லியன் டன் சரக்குகளை ஏற்றிச் சென்றது. சுமார் 6.5 பில்லியன் பயணிகளை அது ஏற்றிச் சென்றது. ரயில்வே ஊழியர்களின் செயல்திறனை மேலும் மேம்படுத்தும் விதமாக உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை இருக்கும்.
மத்திய அரசு ஊழியர் அகவிலைப்படி உயர்வு: விலைவாசி உயர்வை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை நிவாரணத்தின் (டிஆர்) கூடுதல் தவணையை 01.07.2023 முதல் வழங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு 7 வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும். அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.12,857 கோடி செலவாகும். இதன் மூலம் 48.67 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 67.95 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தேர்தல் அறுவடை: தற்போது சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் தெலுங்கானா, ராஜஸ்தான், ம.பி, சத்தீஸ்கர் மாநிலங்களை கவனத்தில் கொண்டே மத்திய அரசு, ரபி பயிர்களுக்கான குறைந்தபட்ச விலை உயர்வை அறிவித்துள்ளது. ராஜஸ்தான், ம.பி. மாநிலங்கள் கோதுமை உற்பத்தியில் முதன்மை இடம் வகிக்கிறது. ஏற்கனவே கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. இவற்றை கணக்கில் வைத்தே மத்திய அரசு தற்போது குறைந்தபட்ச விலை உயர்வை அறிவித்துள்ளது. உதாரணமாக தெலுங்கானாவில் குங்குமப் பூ விவசாயிகளை கவனத்தில் கொண்டு ஆளும் பிஆர்எஸ் கட்சி சில வாக்குறுதிகளை கொடுத்திருந்தது கவனத்தில் கொள்ளலாம். இதர மாநிலங்களில் கோதுமை, நெல் கொள்முதல் விலை கடுமையான தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஏற்கனவே எச்சரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய தேர்தல் மட்டுமல்ல.. லோக்சபா தேர்தல் காலத்திலும் மத்திய அரசின் இந்த குறைந்தபட்ச விலை உயர்வு பெரிதும் கை கொடுக்கும் என்பதுதான் பாஜகவின் கனவு.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications