Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.100 கோடி.. இந்தியா உலக கோப்பை வென்றால் பயனாளர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்! ஆஸ்ட்ரோடாக் அதிரடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா ஆஸ்திரேலியா இடையே உலகக் கோப்பை இறுதிப் போட்டி இன்று நடைபெறும் நிலையில், இதில் இந்தியா வென்றால் 100 கோடி ரூபாயை பகிர்ந்து அளிப்பதாக ஆஸ்ட்ரோடாக் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. லீக் சுற்றில் இந்தியா முதலிடம் பிடித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா 3ஆம் இடம் பிடித்திருந்தது.

Astrotalk promises ₹100 crore reward to users if India wins World Cup final

இன்று பிற்பகல் 2 மணிக்குப் போட்டி தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாகப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா வெல்ல வேண்டும் என்பதே இந்தியர்களின் கனவாக இருக்கிறது.

இந்தியா: இதற்கிடையே இந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் 100 கோடி ரூபாயைத் தனது அனைத்து பயனாளர்களுக்கும் பிரிந்து அளிக்க உள்ளதாக ஆஸ்ட்ரோடாக் நிறுவனத்தின் சிஇஓ புனித் குப்தா அறிவித்துள்ளார். ஆஸ்ட்ரோடாக் என்பது இணையம் வாயிலாக இயங்கும் ஒரு ஜாதகம் பார்க்கும் நிறுவனமாகும். அதாவது இதில் இருக்கும் ஜோதிடர்களிடம் ஆன்லைன் வாயிலாக நாம் ஜாதகம் பார்த்துக் கொள்ளலாம்.

இந்த நிறுவனத்தின் சிஇஓ புனித் குப்தா தான் இப்போது உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அதன் பயனர்களுக்கு ரூ. 100 கோடி ரூபாயைச் சமமாகப் பிரித்து அளிப்பதாக அறிவித்துள்ளார். இந்த பரிசுத் தொகை ஆஸ்டிரோடாக் வாலட்களில் டெபாசிட் செய்யப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இதற்கு இணையத்தில் கலவையான ரியாக்ஷன்களே கிடைத்துள்ளது.

2011 உலகக் கோப்பை: இது தொடர்பாக ஆஸ்ட்ரோடாக் சிஇஓ புனித் குப்தா தனது லிங்ட்இன் பக்கத்தில், "கடைசியாக 2011இல் இந்தியா உலகக் கோப்பையை வென்றது. அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அது என் வாழ்வின் மகிழ்ச்சியான நாட்களில் ஒன்றாகும்.

சண்டிகரில் அருகே கல்லூரியின் ஆடிட்டோரியத்தில் எனது நண்பர்கள் இணைந்து நான் இறுதிப் போட்டியைப் பார்த்தேன். அப்போது பைனல்ஸில் ஒவ்வொரு பாலும் நாங்கள் மிகவும் பதற்றமாக இருந்தோம். நாங்கள் போட்டி தொடங்கும் முன்பு இரவு முழுக்க போட்டி குறித்தே விவாதித்தோம். இதனால் எங்களால் தூங்கக் கூட முடியவில்லை.

100 கோடி ரூபாய்: நாம் உலகக் கோப்பையை வென்ற அந்த நொடி மறக்கவே முடியாது. நான் என் நண்பர்கள் அனைவருடன் அதைக் கொண்டாடினோம். நாங்கள் சண்டிகரில் பைக்கில் பயணித்து அங்கு யார் என்றே தெரியாத நபர்களையும் கூட பார்த்து வாழ்த்துக் கூறினோம்.. அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அன்று வெற்றியை நான் எப்படி நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேனோ.. அதேபோல இன்றும் அதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். எனது யூசர்களும் எனது நண்பர்களைப் போலத் தான்.

இன்று காலை நான் பைனாஸ் குழுவிடம் பேசினேன். இன்று இந்தியா உலகக் கோப்பையை வென்றால், எங்கள் பயனர்கள் அனைவருக்கும் ₹100 கோடியை பிரித்து அளிப்பேன். இது உறுதி.. நீங்கள் இந்திய அணிக்கு சப்போர்ட் செய்து அவர்களை உற்சாகப்படுத்த மட்டும் மறந்துவிடாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

எப்படி: மேலும், இது தொடர்பாக புனித் குப்தா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "இந்தப் போட்டி முடிவடையும் போது, கடைசி பந்திற்கு வீசுவதற்கு முன்பு, 100 கோடி ரூபாயைச் சமமாகப் பிரித்து அனைத்து பயனாளர்களின் வாலெட்களுக்கும் அனுப்பப்படும்" என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகும் நிலையில், பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.

அதேநேரம் ஒரு தரப்பினர் இவர் மார்கெட்டிங் செய்யவே இப்படிச் செய்வதாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த பணத்தை இவரது இணையத்தில் தான் பயன்படுத்த முடியும். எனவே, சுற்றிச் சுற்றி இவருக்குத் தான் பணம் போகும்.. நம்மை ஆஸ்ட்ரோடாக் நிறுவனத்தில் இணையவே இப்படிச் செய்வதாக அவர்கள் சாடி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+