அந்த ஊர் ஓபிஎஸ் போல! டெல்லி சிஎம் சேரில் அமர மறுத்த முதல்வர் அதிஷி.. அது கெஜ்ரிவாலுக்கு சொந்தமானதாம்
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைதாகி சிறைக்குச் செல்லும் போது தமிழக முதல்வராகப் பதவியேற்ற ஒ பன்னீர்செல்வம் கடைசி வரை சிஎம் சேரில் உட்காரவே இல்லை. இப்போது டெல்லியிலும் அங்கு முதல்வராகப் பதவியேற்றுள்ள அதிஷி, சிஎம் சேரில் உட்காராமல் அருகில் காலியாக ஒரு சேர் போட்டு அமர்ந்துள்ளார். டெல்லி சிஎம் சேர் கெஜ்ரிவால் வரும் வரை காத்திருக்கும் என அவர் கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை வழக்கில் இந்தாண்டு தொடக்கத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைதானார். கடந்த சில மாதங்களாகவே சிறையில் இருந்த அவருக்குச் சமீபத்தில் தான் ஜாமீன் வழங்கப்பட்டது.

இருப்பினும், அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக டெல்லி அமைச்சரவையில் இருந்த அதிஷி முதல்வராக அறிவிக்கப்பட்டார். அதன்படி அதிஷி இன்று திங்கள்கிழமை டெல்லியின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
ஓபிஎஸ் மாதிரி: ஆனால், இங்கு எப்படி ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் போது முதல்வராகப் பதவியேற்ற ஓபிஎஸ் முதல்வர் நாற்காலியில் அமர மறுத்துவிட்டாரோ.. அதேபோல அதிஷியும் தனது முதல்வர் நாற்காலியில் அமர மறுத்துவிட்டார். அதாவது ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றிருந்த போது, ஓபிஎஸ் முதல்வர் பொறுப்பேற்றார்.
அவர் என்ன தான் முதல்வராகப் பொறுப்பேற்றாலும் கூட ஜெயலலிதா விடுதலையாகி வரும் வரை அவர் முதல்வர் சேரில் கூட அமரவில்லை. ஜெயலலிதாவின் முதல்வர் நாற்காலி காலியாக இருந்த நிலையில், அவர் வேறு ஒரு சேரை தான் பயன்படுத்தினார். அதேபோலத் தான் இப்போது அதிஷியும் முதல்வர் நாற்காலியை காலியாக விட்டுள்ளார். அதற்குப் பதிலாகச் சாதாரண சேர் ஒன்றைப் போட்டு அதில் தான் அமர்ந்தார்.
ராமாயணம்: தன்னை ராமாயணத்தில் வரும் பரதனுடன் ஒப்பிட்டுக் கொண்ட அதிஷி, முதல்வர் பதவியில் கெஜ்ரிவால் இல்லாத போதிலும் அவரது ஆட்சியைத் தருவேன் என உறுதியளித்தார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அன்று ராமர் சிறைக்குச் சென்ற போது பரதன் எந்த சுமையை சுமந்தாரோ இன்று நானும் அதே சுமையைச் சுமக்கிறேன். ராமரின் செருப்பை அவர் அரியணையில் வைத்து ஆட்சி செய்ததைப் போலவே, நானும் அடுத்த நான்கு மாதங்களுக்கு டெல்லியை ஆட்சி செய்வேன்" என்றார்.
டெல்லி மக்கள் நற்சான்றிதழ் அளிக்கும் வரை தானும் சரி, மனிஷ் சிசோடியாவும் சரி கேபினட் பொறுப்பேற்க மாட்டோம் என கெஜ்ரிவால் கூறியிருந்தார். அப்போதே பலரும் டெல்லியில் முன்கூட்டியே தேர்தல் நடக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறி வருகின்றனர்.
காத்திருக்கும்: இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி மேலும் கூறுகையில், "இந்த முதல்வர் நாற்காலி கெஜ்ரிவாலுக்குச் சொந்தமானது.. டெல்லிக்கு அடுத்தாண்டு பிப். மாதம் தேர்தல் நடக்கும். அப்போது டெல்லி மக்கள் அவரை மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதுவரை, இந்த நாற்காலி இந்த அலுவலகத்திலேயே இருக்கும். கெஜ்ரிவாலின் வருகைக்காகக் காத்திருக்கும்" என்றார்.
பாஜக விமர்சனம்: அதேநேரம் முதல்வர் நாற்காலியில் அதிஷி அமர மறுத்ததைப் பலரும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக பாஜக இதைக் கடுமையாகச் சாடியுள்ளது. டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இரண்டு சேர்களை வைத்தது அரசியலமைப்பை அவமதிக்கும் செயல் என்றும் இது முழுக்க முழுக்க விதிமீறல் என்றும் பாஜக விமர்சித்துள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications