வீரர்கள் தியாகம் வீண் போகாது- மோடி, இந்தியா ஒன்றாக நிற்க வேண்டும்- கெஜ்ரிவால்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Attack on CRPF personnel in Pulwama is despicable: Narendra Modi

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், 27 சிஆர்பிஎப் வீரர்கள், இன்று ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் பலியாகினர்.

பிரதமர் நரேந்திர மோடி, வெளியிட்ட ட்வீட்டில்: சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதல், வெறுக்கத்தக்கது. நான் இதை வன்மையாக கண்டிக்கிறேன். நமது வீரம்மிக்க பாதுகாப்பு படை வீரர்களின் தியாகம் வீன் போகாது. மொத்த நாடும், தோளோடு தோள் சேர்த்து, துணிச்சல்மிக்க நமது வீரர்களின் குடும்பத்திற்கு துணை நிற்கும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என நம்புகிறேன். தாக்குதல் தொடர்பாக ராஜ்நாத்சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட ட்வீட்டில், ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களின் கான்வாய் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் வீர மரணம் அடைந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மரணமடைந்த வீரர்கள் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி இதுபற்றி கூறுகையில், குடும்பத்தில் ஒருவரை இழக்கும் வலியை என்னால் உணர முடிகிறது. வீரர்களை இழந்த குடும்பத்தினருக்கு எனது ஆழ்நத் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, வெளியிட்ட ட்வீட்டில், சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் குடும்பத்தாருக்கு ஆதரவையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்ட ட்வீட்டில், மிகவும் மோசமான அதிர்ச்சி செய்தி புல்வாமாவில் இருந்து வந்துள்ளது. சிஆர்பிஎப் வீரர்கள் மீதான தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த இக்கட்டான நிலையில், இந்தியா ஒற்றுமையாக இணைந்து நிற்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+