டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜாமியா மாணவர் மீது துப்பாக்கி சூடு.. குற்றவாளி மீது பாய்ந்தது கொலை முயற்சி வழக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: ஜாமியா பல்கலைக்கழக மாணவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் மீது, கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, டெல்லி, ஜாமியா பல்கலைக்கழகத்தில் இன்று திரளான மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

அப்போது இளைஞர் ஒருவர் மாணவர்களை நோக்கி நாட்டுத் துப்பாக்கியால் திடீரென சுட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Attempt to murder case has been registered by the Delhi police against Jamia culprit

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டது ராம் கோபால் சர்மா என்ற 19 வயது இளைஞர் என்று தெரியவந்தது. இந்த நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த சம்பவத்தை கண்டித்ததுடன் குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.

துப்பாக்கிச் சூடு.. என்ன நடக்கிறது டெல்லியில்...கெஜ்ரிவால் ஆவேசம்.. நடவடிக்கை எடுப்போம்.. அமித் ஷாதுப்பாக்கிச் சூடு.. என்ன நடக்கிறது டெல்லியில்...கெஜ்ரிவால் ஆவேசம்.. நடவடிக்கை எடுப்போம்.. அமித் ஷா

இதனிடையே டெல்லி காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மீது இந்திய தண்டனை சட்டம் 307வது பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மாணவரான சதாப் பாரூக் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
In the Jamia firing incident which happened earlier on Thursday, an attempt to murder (IPC Section 307) case has been registered by the Delhi police against the culprit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X