"எப்படி பழிவாங்குறேன் பாருங்க.." கழிவறையில் அவுரங்கசீப் பெயரை ஒட்டி வைத்து பூரித்த பாஜக பிரமுகர்!
டெல்லி: உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி விவகாரம் தொடர்பாக கழிவறையில் அவுரங்கசீப் பெயர் போஸ்டரை ஒட்டிய பாஜக பிரமுகர், டெல்லியில் ஜூம்மா மசூதியையும் தோண்டவேண்டும் என கூறி வீடியோ வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது..
உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இதன் வெளிப்புற சுவரில் உள்ள சிங்கார கவுரி அம்மன் மற்றும் கண்ணுக்கு தெரியாத இதர இந்து தெய்வங்களை தினமும் வணங்க அனுமதிகோரி 5 பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் மனு செய்தனர்.
இந்த மனுவை வாரணாசி நீதிமன்றம் விசாரித்தது. மசூதியை ஆய்வு செய்து வீடியோ பதிவு செய்ய 3 பேர் அடங்கிய குழுவை அமைத்தது. இந்த குழு ஆய்வு நடத்தியது.

மசூதியில் சிவலிங்கமா?
இந்த ஆய்வின்போது மசூதிக்குள் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனை மசூதி நிர்வாகம் மறுத்தது. "அது சிவலிங்கம் இல்லை; நீரூற்று" என தெரிவித்தது. இதனை ஏற்க இந்துத்துவ அமைப்பினர் மறுத்தனர். மேலும் ஆய்வு முடிவுகள் தொடர்பான அறிக்கை வாரணாசி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொழுகைக்கு அனுமதி
இதற்கிடையே ஞானவாபி மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் வாரணாசி நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் மசூதியில் தொடர்ந்து முஸ்லிம்கள் தொழுகை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கையாக அந்த பகுதியில் போலீசாரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கழிவறையில் போஸ்டர்
இந்நிலையில் தான் டெல்லி உத்தம் நகர் பகுதியில் பாஜக பிரமுகர் அச்சல் சர்மா ஒரு செயலில் ஈடுபட்டுள்ளார். அதாவது அவுரங்கசீப்பின் பெயர் இருக்கும் போஸ்டரை கழிவறை சுவரில் சுவரில் ஒட்டிய அவர் இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் அந்த வீடியோவில் பேசியதாவது:
|
டெல்லி மசூதியையும் தோண்டனும்
‛‛நான் இந்து மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். அனைத்து கழிப்பறைகளுக்கும் அவுரங்கசீப் முத்ராலே அல்லது சவுசாலே எனும் போஸ்டரை ஒட்டுங்கள். கழிப்பறையின் பெயரை மாற்றம் செய்யுங்கள். வாரணாசி கியான்வாபி மசூதியில் முஸ்லிம்கள் 400 முதல் 500 ஆண்டுகளாக சிவனை மறைத்து வைத்துள்ளனர். கியான்வாபி மசூதியை போல் டெல்லி ஜூம்மா மசூதியையும் தோண்ட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன். அங்கும் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் வடிவமைப்புகள் காணப்படுகின்றன'' என்றார். இது தற்போது சர்சசையாகி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications