லோக்சபா: YES-NO என்பதற்கு பதில்.. 'AYES' மற்றும் 'NOES' வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது ஏன்?
டெல்லி: நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும்போது "YES" என்பதற்குப் பதிலாக "AYES" (ஆய்ஸ்) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஏன்? என்கிற கேள்வி பரவலாக இருக்கிறது. இதற்கான விளக்கத்தை தற்போது பார்ப்போம்.
சிம்பிளாக சொல்வது எனில், 'AYES' (ஆய்ஸ்) என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது ஒரு நீண்டகால மரபாகும். எனவேதான் நாடாளுமன்றத்தில் இது பயன்படுத்தப்படுகிறது.

காரணம் என்ன?
"Aye" என்பது ஒரு பழமையான ஆங்கில வார்த்தை. இதற்கு "ஆம்" (Yes) அல்லது "எப்போதும்" (Always) என்று பொருள். 16-ஆம் நூற்றாண்டிலிருந்தே பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இந்த வார்த்தை வாக்கெடுப்பிற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்திய நாடாளுமன்ற நடைமுறைகள், பிரிட்டிஷ் முறையை (Westminster model) பின்பற்றுவதால், நாமும் அதே வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
ஒலி வேறுபாடு
நாடாளுமன்றம் போன்ற பெரிய அறைகளில் பல உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பேசும்போது, "YES" மற்றும் "NO" ஆகிய வார்த்தைகள் கேட்பதற்கு ஓரளவுக்கு ஒரே மாதிரியாக ஒலிக்கக்கூடும். ஆனால் "AYES" (ஆய்ஸ்) மற்றும் "NOES" (நோஸ்) என்று சொல்லும்போது, இரண்டிற்கும் இடையே உள்ள ஒலி வேறுபாடு மிகத் தெளிவாகத் தெரியும். இது சபாநாயகர் முடிவை அறிவிக்க வசதியாக இருக்கும்.
நாடாளுமன்ற விதிகள் மற்றும் நடைமுறைப் புத்தகங்களில் "Ayes" மற்றும் "Noes" என்ற சொற்களே அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன.
- Ayes: மசோதாவிற்கு ஆதரவானவர்கள்.
- Noes: மசோதாவை எதிர்ப்பவர்கள்.
எனவேதான் நேற்று, தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது சட்டத்திருத்த மசோதா மீதான நடத்தப்பட்ட வாக்கெடுப்பின் முடிவுகளும், 'AYES' மற்றும் 'NOES' என அறிவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications