அயோத்தி வழக்கு.. ரயில்வே நிலையங்களுக்கு அதிரடி எச்சரிக்கை.. பலப்படுத்தப்படும் பாதுகாப்பு!
Recommended Video
டெல்லி: அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதை அடுத்து நாடு முழுக்க ரயில்வே நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வர உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் வரும் 10ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும். இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

என்ன தீர்ப்பு
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளதால் நாடு முழுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இதனால் அயோத்தியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் உள்துறை அமைச்சகம் சார்பாக மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே
இந்த நிலையில் தற்போது இந்தியன் ரயில்வே அனைத்து ரயில்வேவிற்கும் அறிவுரை கடிதம் ஒன்றை அனுப்பி
உள்ளது. இந்த கடிதம் மொத்தம் 7 பக்கம் கொண்டு இருக்கிறது. அதன்படி, அயோத்தி வழக்கு வருவதால் ரயில்வே போலீசாருக்கு விடுப்பு கிடையாது.

போலீசார் எப்படி
ரயில்வே போலீசார் அதிக பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். ரயில்களில் தாக்குதல் நடக்காமல் பாதுகாக்க வேண்டும். வெடிகுண்டு சோதனைகளை தீவிரமாக நடத்த வேண்டும். மக்கள் எல்லோரையும் சோதித்த பின்தான் ரயில் நிலையத்திற்குள் அனுப்ப வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

கூடுதல் பாதுகாப்பு
தீர்ப்பு வருவதற்கு முன்பும், வந்த பின்பும் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. வட மாநிலங்களில் இயல்பை விட அதிக பாதுகாப்பு போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications