பெரும் வாக்குறுதியை நிறைவேற்றிய மோடி! சூட்டோடு சூடாக லோக்சபா தேர்தலை அறிவிக்க முடிவு? மாஸ்டர் பிளான்
டெல்லி: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இடையே பிப்ரவரி இரண்டாம் வாரம் அல்லது 3ம் வாரம் சூட்டோடு சூடாக லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அயோத்தி ராமர் கோவில் பூஜை விமர்சையாக நடைபெற்று வருகிறது. இன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவுக்கான சடங்கு சம்பிரதாயங்கள் அடங்கிய பூர்வாங்க பூஜைகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது.

இன்று திறக்கப்படும்: பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 22 ஆம் தேதி இன்று ராமர் கோவிலில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வார். இந்த ஆலயம் முற்றிலும் நாட்டின் பாரம்பரிய மற்றும் உள்நாட்டு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கோவிலின் சில முக்கிய அம்சங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
திறப்பு விழா: ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்தத்தின்படி, ராமர் கோயில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கோயிலாகும், ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் உள்ளது. இது மொத்தம் 392 தூண்களையும் 44 கதவுகளையும் கொண்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் பிரதான நுழைவாயில் யானைகள், சிங்கங்கள், ஹனுமான் மற்றும் 'கருடா' போன்ற சிலைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் ராஜஸ்தானின் பன்சி பஹர்பூர் பகுதியில் இருந்து பெறப்பட்ட மணற்கல்லைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட கோயில் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரம் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரத்தில் மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களைக் கொண்டிருக்கும்.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு: இந்த நிலையில் விரைவில் லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த சூட்டோடு சூடாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.
இந்த கோவில் திறப்பு விழா காரணமாக வட மாநிலங்களில் மக்கள் இடையே தீவிர பாஜக ஆதரவு அலை உள்ளது.முக்கியமாக உத்தர பிரதேசம் தொடங்கி பீகார் வரை சில ஹிந்தி மாநிலங்களில் தீவிர பாஜக உணர்வு எழுந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு.. லோக்சபா தேர்தல் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வாய்ப்புகள் உள்ளன. பிப்ரவரி இரண்டாம் வாரம் அல்லது 3ம் வாரம் சூட்டோடு சூடாக தேர்தல் அறிவிப்பு வெளியாகும். 2024 லோக்சபா தேர்தல் பெரும்பாலும் ராமர் கோவில் திறப்பு உள்ளிட்ட ஆன்மீக விஷயங்களை மையப்படுத்தியே இருக்கும் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தினர்.
லோக்சபா தேர்தல் போட்டி: தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஏன் உலக அளவில் அதிக தொண்டர்கள் கொண்ட கட்சியில் பாஜக ஒன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்னவோ பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை.
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக ஒருவர் கூட எம்பியாக தேர்வாகவில்லை. அந்த அளவிற்கு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாத சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு சில மாவட்டங்களில் சரியான பூத் கமிட்டி கூட இல்லாத நிலை உள்ளது.
பூத் கமிட்டியில் ஆள் போடுவதற்கு கூட உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் பாஜக பெரிதாக வலுவாக இல்லை.
பாஜகவை தென்னிந்தியாவில் வலுப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் பாஜகவின் கால் தடத்தை பதிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி சில திட்டங்களில் இறங்கி உள்ளாராம். தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையை, முக்கியமாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
தமிழ்நாடு போட்டி: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் அல்லது மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.












Click it and Unblock the Notifications