இந்திக்கு எதிராக ''போக்கிரிகள்'' கூச்சல்.. ஆயுஷ் செயலாளர் கோட்சே பகீர் பேச்சு.. வலுக்கும் எதிர்ப்பு!
டெல்லி: ஆயுஷ் மீட்டிங்கில் சில போக்கிரிகள் கலந்து கொண்டு தொந்தரவு செய்தனர், அவர்கள்தான் மீட்டிங்கை கெடுத்துவிட்டனர் என்று ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சே தெரிவித்துள்ளனர்.
Recommended Video
'ஆயுஷ்' அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட மருத்துவர்களுக்கான இணையவழிப் பயிற்சி முகாமில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சே இந்தியில் வகுப்புகளை நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
இந்த மீட்டிங்கில் கலந்து கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவை சேர்ந்த மருத்துவர்கள் கோட்சேவிடம் ஆங்கிலத்தில் பேசும்படி கூறியுள்ளனர். இதற்கு கோட்சே கோபமாக, ஆங்கிலம் எனக்கு சரியாக தெரியாது, இந்தியில்தான் பேசுவேன், கேட்க முடியாது என்றால் மீட்டிங்கில் இருந்து கிளம்புங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் .

சொன்னது என்ன
இவரின் இந்த திமிர்தனமான பேச்சு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி உள்ளிட்டோர் கோட்சேவின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா ஆகிய மாநில மக்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தி திணிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது, என்று தென்னிந்திய மக்கள் புகார் அளித்துள்ளனர்.

போக்கிரிகள்
இந்த நிலையில் ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சே, ஆன்லைன் வகுப்பில் கலந்து கொண்ட தென்னிந்தியர்களை போக்கிரிகள் (hooligans) என்று அழைத்து உள்ளார். நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், ஆயுஷ் மீட்டிங்கில் நான் இந்தியிலும் பேசினேன், ஆங்கிலத்திலும் பேசினேன். ஆனால் சிலர் மீட்டிங்கில் அனுமதி இன்றி பேசி தொல்லை செய்தனர்.

வந்தனர்
சில போக்கிரிகள் வேண்டும் என்றே மீட்டிங்கை கெடுக்கும் வகையில் பேசினார்கள். அவர்கள் வேண்டும் என்றே உள்ளே வந்து, அனைத்தையும் முடக்க வேண்டும், மீட்டிங்கை காலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டனர். அதன்பின் என் மீது இவர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் செய்ததுதான் தவறு என்று ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்யா ராஜேஷ் கோட்சே தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பு
இவரின் இந்த விளக்கம் கடும் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறது. அதிலும் தென்னிந்தியர்களை இவர் போக்கிரிகள் என்று அழைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் வெளிப்படையாக இவர் போக்கிரிகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாளுக்கு நாள் எதிர்ப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications