டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிதி திரட்டிய விவகாரம்.. யூடியூபர் மீது பாபா கா தாபா உரிமையாளர் போலீஸில் புகார்

Google Oneindia Tamil News

டெல்லி: உதவி செய்வதற்கு நிதி திரட்டிய விவகாரத்தில் டெல்லியைச் சேர்ந்த யூடியூபர் வாசன் மீது பாபா கா தாபா உரிமையாளர் புகார் கொடுத்துள்ளார்.

டெல்லி மால்வியா நகரில் பாபா கா தாபா என்ற உணவகத்தை நடத்தி வருகிறார் காந்தா பிரசாத். இவர் தொடர்பான வீடியோ கடந்த மாதம் சமூகவலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவை யூடியூபர் கவுரவ் வாசன் தனது சமூகவலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.

Baba Ka Thaba owner gives complaint against Delhi you tuber.

கொரோனா ஊரடங்கால் தங்கள் தொழில் முடங்கியதாகவும் வாடிக்கையாளர்கள் யாரும் வராததால் உணவகத்தை நடத்த சிரமப்படுவதாகவும் காந்தா பிரசாத் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவை தனது யூடியூபில் பகிர்ந்த வாசன் இந்த முதியவருக்கு நிதி உதவி வழங்கிடுமாறு கேட்டுக் கொண்டு தனது வங்கிக் கணக்குகளை அனுப்பி வைத்திருந்தார். முதிய தம்பதியின் கஷ்டத்தை உணர்ந்த பலர் தாராளமாக நிதியுதவியை அளித்தனர்.

Baba Ka Thaba owner gives complaint against Delhi you tuber.

இந்த நிலையில் தனது பெயரை பயன்படுத்தி திரட்டப்பட்ட நிதியை யூடியூப் உரிமையாளர் கவுரவ் வாசன் முறைகேடாக பயன்படுத்தியதாக மால்வியா நகர் காவல் நிலையத்தில் காந்தா பிரசாத் புகார் அளித்துள்ளார்.

டக்கென மாறும் காட்சிகள்.. அமைச்சர்களின் யோசனையை பட்டென தடுத்து நிறுத்தி.. ஆப்பு வெச்ச அதிமுக தலைமைடக்கென மாறும் காட்சிகள்.. அமைச்சர்களின் யோசனையை பட்டென தடுத்து நிறுத்தி.. ஆப்பு வெச்ச அதிமுக தலைமை

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் தன் மீதான குற்றச்சாட்டை வாசன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பாபாவை பொதுமக்கள் தொந்தரவு செய்வதை நான் விரும்பவில்லை. எனவே எனது வங்கி விவரங்களை கொடுத்து நிதி திரட்டினேன் என வாசன் தெரிவித்துள்ளார்.

English summary
Baba Ka Thaba owner gives complaint against Delhi you tuber Vasan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X