கரும்பு தோட்டத்தில் சுகர் பேபி! ஓனர் டார்ச் அடித்ததுமே கம்பத்தின் பின்னால் பதுங்கிய குட்டி யானை!
டெல்லி: தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் நுழைந்து கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, தோட்ட உரிமையாளர் டார்ச் அடித்துப் பார்த்தபோது, பதற்றமடைந்து ஒரு கம்பத்தின் பின்னால் மறைந்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

கரும்பு விளைச்சலுக்குத் தயாராக இருந்ததால், தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள கரும்புத் தோட்டத்தின் உரிமையாளர் தினமும் இரவு நேரத்தில் காவலுக்கு வருவது வழக்கம். அவர் தூங்கும் நேரம் பார்த்து, யானைகள் கூட்டம் ஒன்று கரும்புத் தோட்டத்திற்குள் நுழைந்தது. அங்கிருந்த கரும்புகளைச் சுவைத்து, "ஆஹா! நல்ல வேட்டை" என நினைத்து, கரும்புகளை உடைத்து வேகமாகச் சாப்பிட்டன.
சப்தம் கேட்டதும்
யானைகள் நடக்கும் சத்தம், கரும்பை உடைக்கும் ஓசை போன்ற சலசலப்புகள் காவலுக்குப் படுத்திருந்த உரிமையாளருக்குக் கேட்டன. இதையடுத்து அந்த நபர் பதறியடித்துக்கொண்டு எழுந்து, கையில் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தார். டார்ச் வெளிச்சம் முகத்தில் பட்டதும் யானைகள் கூட்டம் "டேய் செவல, தாவுடா தாவு" என்ற வடிவேலு காமெடியைப் போல் மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தன.
குட்டி யானையின் குறும்புத் தனம்
ஆனால், அங்கிருந்த ஒரு குட்டி யானை, தனது தாய் மற்றும் "சொந்தங்களுடன்" செல்லாமல், அங்கேயே நின்று, உரிமையாளர் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு, இன்னும் கரும்பை ருசிக்கலாம் எனத் திட்டமிட்டது. இதற்காக ஒரு மின்கம்பத்தின் பின்னால் பதுங்க முயற்சி செய்தது. தனது உடல் கம்பத்தைவிடப் பெரிதாகவும், தெளிவாகத் தெரிந்தபோதிலும், தன்னை யாரும் பார்க்கவில்லை என்று அது நம்புவதுபோல் காணப்பட்டது. மனிதர்கள் அதன் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சியபோதும், தான் கண்டுபிடிக்கப்படக் கூடாது என்ற நம்பிக்கையில் அது அசைவின்றி நின்றது. இந்தக் குட்டி யானையின் பதுங்கும் முயற்சி வெற்றியடையவில்லை என்றாலும், அதன் செயல் இணையத்திற்கு ஒரு அழகான படத்தைக் கொடுத்துள்ளது.
நெட்டிசன்களின் கமெண்டுகள்
"நம்ம இருக்கும் சைஸுக்கு கரும்புத் தோட்டத்துக்குள்ளேயே ஒளிய முடியாதுனு தெரியாத அப்பாவி குட்டியா இருக்கியேடா நீ" என நெட்டிசன்கள் அதைக் கிண்டல் செய்து வருகிறார்கள். அதன் முகபாவம், அப்படியே சினிமாவில் காட்டுவது போல் தவறு செய்துவிட்டுத் தப்ப முயலும் யானையின் முகபாவம் இருப்பதாகப் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.
மனித-விலங்கு மோதல்கள்
தாய்லாந்தில் காணப்படும் யானைகள், ஆசிய யானைகளின் ஒரு துணையினமான இந்திய யானைகள் ஆகும். இவை ஆப்பிரிக்க யானைகளை விடச் சிறிய காதுகளைக் கொண்டவை. 2025 நிலவரப்படி, தாய்லாந்தில் சுமார் 4,422 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை ஐந்து வனப்பகுதிகளில் வாழ்கின்றன.
யானைகளின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், மனிதர்கள் வனப்பகுதிகளுக்குள் ஊடுருவி வருவதாலும், இந்த மென்மையான ராட்சதர்களுடன் இணைந்து வாழ்வது ஒரு ஆபத்தான போராட்டமாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு, யானைகள் தொடர்பான 4,700 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 594 விவசாய நிலங்கள் சேதமடைந்தன, 67 சொத்துகள் சேதமடைந்தன, மற்றும் 22 உள்ளூர்வாசிகள் காயமடைந்தனர்.
யானைகள் தாய்லாந்தில் பாதுகாக்கப்படும் விலங்குகள் ஆகும். சட்டவிரோதமாக யானைகளைக் கொல்வது, குறிப்பாக வேட்டையாடுதல் (poaching) அல்லது கடத்தல் (trafficking) தொடர்பான கொலைகளுக்கு, கடுமையான சிறைத் தண்டனையும், அதிக அபராதங்களும் விதிக்கப்படும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications