இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் திடீரென ஒருநாள் தள்ளிவைப்பு.. காரணம் என்ன?
டெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து நாளை மாலை 5.52 மணிக்கு விண்வெளிக்கு பயணம் செய்வதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் விண்வெளிக்கு புறப்படுவது ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுபான்ஷு சுக்லா புதன்கிழமை விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி துறையில் உலக அரங்கில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைச் செய்து வருகிறது. இத்தகைய சூழலில் தான், அமெரிக்கா நாசாவின் ஆக்சியம் மிஷன் 4-ல் விண்வெளி திட்டத்தில் இஸ்ரோ கைகோர்த்துள்ளது.

ஒரு நாள் ஒத்திவைப்பு
இந்த திட்டத்தின் படி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முதல்முறையாகச் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் செல்ல உள்ளார். விமானப்படை விமானியான சுபான்ஷு சுக்லா தான் விண்வெளி நிலையத்திற்குச் செல்ல இருக்கிறார்.
1984 ஆம் ஆண்டு விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ராகேஷ் சர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் இருந்து நாளை மாலை 5.52 மணிக்கு விண்வெளிக்கு பயணம் செய்வதாக இருந்தது.
இஸ்ரோ தலைவர் பேச்சு
ஆனால் மோசமான வானிலை காரணமாக அவர் விண்வெளிக்கு புறப்படுவது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் 11 ஆம் தேதி அவர் விண்வெளிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். இந்தியா, அமெரிக்கா, போலந்து மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த விண்வெளி வீரர்களுடன் கூடிய Ax-4 விண்வெளி திட்டத்தில் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார்.
இதுகுறித்து இஸ்ரோ தலைவர் டாக்டர். வி. நாராயணன் கூறியதாவது:- Axiom-4 குழுவினர், புதிய ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம், கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் பயணிக்க உள்ளனர். இதற்கு முன்பு, இந்தப் பயணம் மே 29-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டு, ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், சில தொழில்நுட்பக் காரணங்களால் ஜூன் 10-ம் தேதிக்கு மாற்றப்பட்டது.
விண்வெளி வீரர்களின் ஆய்வு
Ax-4 பணி தொடங்கியதும், விண்வெளி வீரர்கள் ISS-ல் 14 நாட்கள் தங்கி, இந்திய ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்படும் அறிவியல் சோதனைகளில் ஈடுபடுவார்கள். நுண்ணுயிர்கள், உயிரியல் மற்றும் பொருட்கள் அறிவியல் தொடர்பான புரிதலை மேம்படுத்துவதில் இந்தச் சோதனைகள் கவனம் செலுத்தும். மேலும், 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தாமதம் ஒரு சிறிய பின்னடைவாக இருந்தாலும், விண்வெளிப் பயணத்தின் சிக்கல்களையும், ஏவுதல் நடவடிக்கைகளில் வானிலையின் முக்கியத்துவத்தையும் இது காட்டுகிறது. என்றார். Axiom-4 மிஷன் மீண்டும் ஏவுவதற்குத் தயாராகி வருவதால், இந்தியாவில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் உட்பட உலகின் விண்வெளி ஆர்வலர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications