ஜாமீன் என்பது விதி.. சிறை என்பது விதிவிலக்கு.. PMLA வழக்கிலும் இதுவே நியதி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!
டெல்லி: சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்காக இருந்தாலும், ஜாமின் என்பது விதி, சிறை தண்டனை என்பது விதிவிலக்கான நிகழ்வுகளில் மட்டும் தான் என உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் அமலாக்கத்துறை பெறும் வாக்குமூலம் ஆதாரமாக ஏற்கப்படாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ், சுரங்க முறைகேடு தொடர்பான பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மாநில நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜாமீன் கேட்டு பிரேம் பிரகாஷ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமின் என்பது விதி, சிறை என்பது விதி விலக்கான நிகழ்வுகளில் மட்டுமே என்பது சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்திற்கும் (PMLA) பொருந்தும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜாமீன் வழங்குவது இரட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டுமே பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஜாமின் என்பது விதி என்ற அடிப்படைக் கொள்கையை அது மாற்றாது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படும் வழக்குகளில் கூட பொதுவான ஜாமின் வழங்க வேண்டும் என்று விதி கூறுகிறது என நீதிபதிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.
மேலும், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ், இந்த குற்றங்களில் முதன்மையானவர் அல்ல, அவர் சாட்சியங்களை சிதைக்க வாய்ப்பில்லை எனக் கூறி, பிரேம் பிரகாஷுக்கு 5 லட்ச ரூபாய் ஜாமீன் பத்திர ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பண மோசடி தடுப்புச் சட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அமலாக்கத்துறை விசாரணை அலுவலகத்தில் அளிக்கும் வாக்குமூலங்கள் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் இந்திய சாட்சியச் சட்டத்தின் பிரிவு 25ன் கீழ் அத்தகைய வாக்குமூலங்களுக்கு எதிரான தடை பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் அமலாக்கத்துறையால் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்டு, ஜாமீன் மறுக்கப்பட்டு வரும் நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இன்றைய உத்தரவு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications