5 மாநில தேர்தல்.. அரசியல் பேரணிகளுக்கு வரும் பிப். 11 வரை தொடரும் தடை.. சில தளர்வுகளும் அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நெருங்கும் நிலையில், பிரசார கட்டுப்பாடுகள் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஓமிக்ரான் காரணமாக தற்போது நாடு முழுவதும் கொரோனா 3ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களாகவே நாட்டின் பெரும்பாலான இடங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்த வரும் போதிலும், வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.

 5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இதற்கிடையே உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல் காரணமாகவே 2ஆம் அலை அதிகரித்தாக ஒரு கருத்து உள்ளது. எனவே, இந்த முறை இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் சற்றே முன்னெச்சரிக்கை உடன் செயல்பட்டு வருகிறது. ஓமிக்ரான் அலை காரணமாகத் தேர்தல் பரப்புரைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

 நீட்டிப்பு

நீட்டிப்பு

இந்நிலையில், சில பரப்புரை கட்டுப்பாடுகளை வரும் பிப். 11ஆம் தேதி வரை நீட்டிப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பேரணிகள், பாத யாத்திரைகள், சைக்கிள்/ பைக் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கான தடையைப் பிப்ரவரி 11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதர பரப்புரை உள்ளரங்கு நிகழ்ச்சிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளையும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 தளர்வுகள்

தளர்வுகள்

அதன்படி இனி அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அதிகபட்சமாக 1,000 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் முன்னதாக இதுபோன்ற கூட்டங்களில் 500 பேர் வரை மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதேபோல வீடு வீடாகச் சென்று பரப்புரை செய்வதிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 10இல் இருந்து 20ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல உள்ளரங்குகளில் நடைபெறும் கூட்டங்களில் 500 பேர் அல்லது அரங்கின் முழு கொள்ளவில் 50% வரை மக்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆலோசனை

ஆலோசனை

கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக ஐந்து மாநிலங்களின் சுகாதார மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னரே இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறுகையில், ஒவ்வொரு மாநிலத்திலும் நிலவும் கொரோனா பாதிப்பு நிலையைக் கருத்தில் கொண்டே தளர்வுகள் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

 5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல்

இந்த 5 மாநில தேர்தல் மொத்தம் 7 கட்டங்களை நடைபெறுகிறது. அதிகபட்சமாக உ.பி-இல் 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதேபோல மணிப்பூர் மாநிலத்தில் 3 கட்டங்களாகவும் பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5 மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+