வங்கதேசத்துக்கு ஷாக்.. மாலத்தீவு - ஆப்கானிஸ்தானுக்கு நிதியை அள்ளிக்கொடுத்த இந்திய வெளியுறவுத்துறை
டெல்லி: இந்தியா சார்பில் நட்பு நாடுகளுக்கு உதவி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்படும். இந்தி நிதி என்பது மத்திய வெளியுறவுத்துறை மூலம் வெளிநாடுகளுக்கு உதவியாக வழங்கப்படும். அந்த வகையில் 2025-26ம் ஆண்டில் வெளிநாடுகளுக்கு உதவி செய்ய மத்திய வெளியுறவுத்துறை ரூ.5,483 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் மாலத்தீவு, ஆப்கானிஸ்தானுக்கு ஜாக்பாட் அடித்துள்ள நிலையில், வங்கதேசத்துக்கு இந்தியா ஷாக் கொடுத்துள்ளது.
ஒவ்வொரு நாட்டுக்கும் அண்டை நாடுகள் மிகவும் முக்கியம். அதேபோல் எல்லைகளை பகிர்ந்து கொள்ளாத நாடுகளாக இருந்தாலும் கூட அவற்றுடன் நட்பை தொடர வேண்டும் என்று ஒவ்வொரு நாடுகளும் விரும்பும். அந்த வகையில் தான் நம் நாடும் அண்டை நாடுகள் உள்பட உலகின் அனைத்து பகுதிகளிலும் இருக்கும் நாடுகளிடம் நட்பாக செயல்பட்டு வருகிறது.

ஆனால் சில நாடுகள் நம்மை சீண்டி பார்க்கின்றன. இப்படியான நாடுகளுக்கு சரியான நேரத்தில் நம் நாடும் பதிலடி கொடுக்க தவறுவது இல்லை. மேலும் நம்முடன் நல்ல உறவில் உள்ள பிற நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி உதவி செய்வதோடு, பல்வேறு திட்டங்களை அந்த நாட்டில் நிறைவேற்றி வழங்கி வருகிறது.
அந்த வகையில் தான் இன்று 2025-26ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் மத்திய வெளியுறவுத்துறைக்கு மொத்தம் ரூ.20,516 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் ரூ.5,483 கோடி என்பது பிற நாடுகளுக்கு உதவிடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளிநாடுகளுக்கு உதவி செய்ய மத்திய அரசு சார்பில் ரூ.5,806 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை அந்த தொகை என்பது கொஞ்சம் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
மாலத்தீவு
இதற்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் இருக்கும் நாடு மாலத்தீவு. கடந்த ஆண்டு நம் நாட்டுடன் மாலத்தீவு மல்லுக்கட்டியது. அதன்பிறகு நம் நாட்டு மக்கள் மாலத்தீவு செல்வதை தவிர்த்தனர். இதனால் பொருளாதாரத்தில் அடிவாங்கிய மாலத்தீவு நம் நாட்டுடன் இணக்காக செயல்பட தொடங்கி உள்ளது.
மாலத்தீவில் இருந்து நம் நாட்டு படை வீரர்களை வெளியேற்றிய நிலையில் மீண்டும் அங்கு பணி அமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த நாட்டின் பாதுகாப்பு துறை அமைச்சர் காசன் மாமூன் கூறியுள்ளார். இப்போது நம் நாட்டுக்கும் மாலத்தீவுக்கும் இடையே இணக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலத்தீவுக்கு நம் நாடு தாராளம் காட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டில் மாலத்தீவுக்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.600 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - வங்கதேசம்:
இந்த பட்டியலில் 4வது இடத்தில் இலங்கை உள்ளது. இலங்கைக்கு, மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ரூ.300 கோடி நிதி என்பது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 4வது இடத்தில் வங்கதேசம் உள்ளது. தற்போது நம் நாட்டுடன் மோதலை வங்கதேசம் கடைப்பிடித்து வருகிறது. அங்கு ஹசீனாவின் ஆட்சி கலைந்த பிறகு இடைக்கால அரசு ஆட்சி நடத்துகிறது. இந்த இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் நம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தான், சீனாவுடன் வங்கதேசம் நெருக்கம் காட்டி வருகிறது.
இதனால் இருநாடுகள் இடையயோன உறவு என்பது மோசமாகி உள்ளது. இதனால் வங்கதேசத்துக்கு வழங்கப்படும் நிதி என்பது அதிகரிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு வங்கதேசத்துக்கு ரூ.120 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் அதேபோல் ரூ.120 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், ‛‛நீங்கள் எங்களிடம் மோதினாலும் பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் வாங்கி தந்தது நாங்கள் தான். சொல்லப்போனால் எங்களின் தம்பி தான் நீங்கள்’’ என்பது போல் இந்தியா உதவியை அறிவித்துள்ளது. ஒருவேளை மோதலை கடைப்பிடிக்காமல் இருந்திருந்தால் கூடுதல் நிதி என்பது ஒதுக்கப்பட்டு இருக்கலாம்.
ஆப்கானிஸ்தான்:
இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள நாடு ஆப்கானிஸ்தான். ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் மோதல் உள்ளது. மேலும் ஆப்கானிஸ்தானில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் தாக்குதலை கண்டிக்கும் வகையிலும் நம் நாடு அந்த நாட்டுடன் உறவை வலுப்படுத்த தொடங்கி உள்ளது.
சமீபத்தில் கூட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி விக்ரம் மிஸ்ரி துபாயில் வைத்து ஆப்கானிஸ்தான் தலைவர்களை சந்தித்து பேசினார். மனிதாபிமான உதவிகளை இந்தியா வழங்கும் என்று உறுதியளித்தார். அதன்படி தற்போது ஆப்கானிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதனால் நம் நாடு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய நிதி உதவியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.50 கோடி நிதி உதவிய இநு்தியா இந்த முறை ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மியான்மர்:
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
இந்திய மக்களுக்கு நன்றி.. இஸ்ரேல் - அமெரிக்க தளங்களை தாக்கும் ஈரான் ஏவுகணையை கவனிச்சீங்களா? பின்னணி -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications