அனில் அம்பானி நாட்டை விட்டு வெளியேற தடை.. ED - CBIக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: வங்கிகளில் ரூ.40 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கி மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவரது ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் மீது வழக்குகள் உள்ளன. இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கத்துறை சரியாக விசாரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு சிறப்பு விசாரணை குழு அமைக்க அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி அனில் அம்பானி நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது எனக்கூறியநீதிமன்றம் எஸ்ஐடி அமைக்க அதிரடியாக உத்தரவிட்டது.

பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி. இவர் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை நடத்தி வந்தார். இவர் வங்கிகளில் கடன் வாங்கி அதனை பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்திதாக கூறப்படுகிறது. யெஸ் வங்கி ரூ.2,796 கோடி கடன் வழங்கியது. அதனை அவர் சட்டவிரோதமாக பிற நிறுவனத்துக்கு பயன்படுத்தி உள்ளார்.
ரூ.40,000 கோடி வரை மோசடி
மொத்தம் ரூ.40 ஆயிரம் கோடி வரை அனில் அம்பானி பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.
உச்சநீதிமன்றம் விசாரணை
இந்நிலையில் தான் அனில் அம்பானிக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்ய பக்சி மற்றும் விபுல் பஞ்சோலி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணையில் உச்சநீதிமன்றம் திருப்தியடையவில்லை.
இதனால் உச்சநீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
மூத்த அதிகாரிகள் கையாள..
மேலும் உச்சநீதிமன்றம், ‛இந்த வழக்குகளை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரிகள் சரியாக விசாரிக்க வேண்டும். மூத்த அதிகாரிகள் இந்த வழக்கை கையாள வேண்டும். வங்கி அதிகாரிகள் உடந்தையாக இருந்தார்களா? என்பதை சிபிஐ விசாரிக்க வேண்டும்.
வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு?
வங்கி அதிகாரிகளின் உதவியுடன் கடன்கள் வழங்கப்பட்டதா அல்லது நிதி விடுவிக்கப்பட்டதா என்பதை விசாரிப்பது அவசியம் . கூட்டு சதி அல்லதுஉடந்தையாக இருந்தவர்கள் பற்றி நியாயமாகவும், பாரபட்சமாகவும் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்ஐடி அமைக்க...
அதேவேளையில் இந்த வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறை விரைவாக செயல்பட வில்லை என்று கருதுகிறோம். இரு ஏஜென்சிகளும் நான்கு வாரங்களுக்குள் விரிவான நிலை அறிக்கைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அமலாக்கத்துறை எஸ்ஐடி அமைத்து வுிசாரணை நடத்த வேண்டும்'' என்று உத்தரவிட்டது.
நாட்டை விட்டு வெளியேற..
இதையடுத்து அனில் அம்பானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஷத்கி, முன் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறமாட்டார் என்றும் நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளுக்கும் இணங்குவார் என்றும் கூறினார்.
இதற்கு அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இதற்கு முன்பு இத்தகைய உறுதிமொழி வழங்கப்பட்ட பிறகு ஒருவர் வெளிநாடு சென்றதாக கூறினார். இருப்பினும் நீதிமன்றம் அனில் அம்பானி தரப்பு வழக்கறிஞரின் கூற்றை ஏற்றது. நீதிமன்ற அனுமதியின்றி அவர் வெளிநாடுகளுக்கு செல்ல கூடாது என்று கூறியது.












Click it and Unblock the Notifications